மலையாள நடிகர் பிரித்விராஜிடம் கோரிக்கை வைத்த கேஜிஎப் நாயகி... எதப்பத்தின்னு தெரிஞ்சுக்கலாமா!
திருவனந்தபுரம் : கேஜிஎப் மற்றும் கேஜிஎப் 2 படங்களில் நடித்ததன் மூலம் கன்னட மொழியை தாண்டி இந்திய அளவில் தனக்கான ரசிகர்களை பெற்றுள்ளார் ஸ்ரீநிதி ஷெட்டி. இவர் படத்தின் பிரமோஷனுக்காக கேரளா சென்ற போது மலையாள திரையுலகம் குறித்து மனம்திறந்து பாராட்டியுள்ளார்.

கேஜிஎப் 2 படம்
நடிகர் யஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத் மற்றும் ரவீணா டன்டன் ஆகியோர் நடிப்பில் கடந்த ஏப்ரல் 14ம் தேதி கோடைக் கொண்டாட்டமாக சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசானது கேஜிஎப் சாப்டர் 2. இந்தப் படத்தில் நாயகியாக நடித்ததன்மூலம் கன்னட படவுலகை தாண்டி பெரும் புகழை பெற்றுள்ளார் ஸ்ரீநிதி ஷெட்டி.

தொடர் பிரமோஷன்
இவர் படத்தின் பிரமோஷனுக்காக பல பேட்டிகளை தொடர்ந்து கொடுத்துவந்தார். அப்போது மலையாள திரைப்பட உலகத்தை குறித்து பாராட்டுக்களை தெரிவித்திருந்தார். தான் மலையாளத்தில் துல்கர் சல்மானின் சார்லி படத்தைதான் முதலில் பார்த்ததாகவும் அந்தப் படம் தன்னை வெகுவாக கவர்ந்ததாகவும் தெரிவித்திருந்தார்.

வெறித்தனமான காதல்
அவர் அளித்த மற்றொரு பேட்டியில் பிரித்விராஜ் இயக்கத்தில் மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான லூசிபர் படத்தை தான் திரையரங்கில் சென்று பார்த்ததாகவும் அதையடுத்து அந்தப் படத்தின்மீது தனக்கு வெறித்தனமாக காதல் பிறந்ததாகவும் தெரிவித்திருந்தார். அந்த அளவிற்கு அந்தப் படம் தன்னை ஈர்த்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

பிரித்விராஜிடம் நேரில் கோரிக்கை
இதையடுத்து கேரள பிரமோஷனுக்காக கேரளா சென்றிருந்த ஸ்ரீநிதி ஷெட்டி, லூசிபர் படத்தை இயக்கியிருந்த பிரித்விராஜை நேரில் சந்தித்தபோது, அந்தப் படத்தின் இரண்டாவது பாகத்தை உடனடியாக எடுக்க வேண்டும் என்று நேரில் கோரிக்கை வைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

2வது பாகத்திற்காக கோரிக்கை
அந்தப் படம் தன்னை வெகுவாக கவர்ந்த நிலையில், படத்தின் இரண்டாவது பாகத்தை பார்க்க தான் ஆவலுடன் காத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கேஜிஎப் 2 படத்தின் கேரள வெளியீட்டு உரிமையை பிரித்விராஜ் பெற்றிருந்த நிலையில், அவரை பிரமோஷனின்போது சந்தித்த ஸ்ரீநிதி இந்த கோரிக்கையை வைத்துள்ளார்.

லூசிபரை இயக்கிய பிரித்வி
மலையாளத்தில் மிகச்சிறந்த நடிகராக உள்ளவர் பிரித்விராஜ். தற்போது அவரது நடிப்பில் ஜன கன மன படம் வெளியாகியுள்ளது. முன்னதாக மோகன்லாலை வைத்து அவர் லூசிபர் படத்தை இயக்கியிருந்தார். இந்தப் படம் மிரட்டலான விமர்சனங்களை பெற்றது. மலையாள சினிமாவின் பெஸ்ட் படங்களில் ஒன்றாக மாறியுள்ளது.


Click it and Unblock the Notifications











