twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆமாமா, உண்மைதான்.. சஞ்சய் தத் லுக்கிற்கு அதுதான் இன்ஸ்பிரேஷன்.. 'கே.ஜி.எப்' இயக்குனர் ஒப்புதல்!

    By
    |

    சென்னை: கே.ஜி.எஃப் சாப்டர் 2 படத்தின் சஞ்சய் தத்தின் லுக், ஆங்கில சீரியலில் வரும் கேரக்டரின் காப்பி என்று நெட்டிசன்ஸ் கூறியுள்ளனர். அந்த இன்ஸ்பிரேஷனில் உருவாக்கப்பட்டதுதான் என்று இயக்குனர் ஒப்புக்கொண்டுள்ளார்.

    Recommended Video

    KGF Amma Archana Ultra model Picture • KGF 2 • Yash

    தமிழ், கன்னடம், இந்தி, மலையாளம், தெலுங்கு மொழிகளில் வெளியாகி கடந்த 2018 ஆம் ஆண்டு சூப்பர் ஹிட்டான படம், 'கே.ஜி.எப்'.

    யஷ் ஹீரோவாக நடித்திருந்தார். இந்தப் படத்தின் இரண்டாம் பாகம், கேஜிஎப் சாப்டர் 2 என்ற பெயரில் உருவாகி வருகிறது.

    ரியா சக்கரவர்த்தி மீது வழக்கு.. 'உண்மை வென்றது..' சுஷாந் சிங்கின் மற்றொரு காதலி பரபரப்பு போஸ்ட்! ரியா சக்கரவர்த்தி மீது வழக்கு.. 'உண்மை வென்றது..' சுஷாந் சிங்கின் மற்றொரு காதலி பரபரப்பு போஸ்ட்!

    2 ஆம் பாகம்

    2 ஆம் பாகம்

    முதல் பாகத்தை இயக்கிய பிரசாந்த் நீல், இயக்குகிறார். முதல் பாகத்தில் நடித்த ஶ்ரீனிதி ஷெட்டி இதிலும் ஹீரோயின். ஆனந்த் நாக், மாளவிகா அவினாஷ் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தி நடிகர் சஞ்சய் தத், அதீரா என்ற கேரக்டரில் கொடூர வில்லனாக நடிக்கிறார். முதல் பாகம் ஹிட்டானதால், இரண்டாம் பாகத்துக்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    நடிகர் சஞ்சய் தத்

    நடிகர் சஞ்சய் தத்

    இந்தப் படத்தில் ரவீணா டாண்டன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அவர் அரசியல்வாதியாக நடிப்பதாகக் கூறப்பட்டது. ரவீணா மறுத்திருந்தார். இதன் டீசர் விரைவில் ரிலீஸ் ஆகப் போவதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகி இருந்தது. அதைப் படக்குழு மறுத்திருந்தது. இந்நிலையில், நடிகர் சஞ்சய் தத்தின் பிறந்த நாளை முன்னிட்டு, 'கே.ஜி.எஃப் 2' படத்தில் அவர் கேரக்டரின் லுக் நேற்று வெளியிடப்பட்டது.

    காப்பி அடித்துள்ளதாக

    காப்பி அடித்துள்ளதாக

    இந்த லுக், ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த லுக்கை, வைக்கிங்ஸ் என்ற ஆங்கில வரலாற்று டிவி சீரியலில் இடம்பெறும் ரக்னர் லோத்ப்ரோக் என்ற கேரக்டரில் இருந்து காப்பி அடித்துள்ளதாக ட்விட்டரில் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். அந்தப் புகைப்படங்களை பதிவிட்டு ஒப்பிட்டு வருகின்றனர். வைக்கிங்ஸ் தொடரில் அந்த ரக்னர் கேரக்டரில் டிராவிஸ் பிம்மெல் என்ற நடிகர் நடித்துள்ளார்.

    நிறைய மாற்றங்கள்

    நிறைய மாற்றங்கள்

    இதை ஒப்புக்கொண்டுள்ள படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல், 'உண்மைதான். கொடூர வில்லனாக சஞ்சய் தத்தைக் காட்ட சில ரெபரன்ஸ்களை பார்த்தோம். அதில் வைக்கிங் தொடரின் கேரக்டர் இன்ஸ்பிரேஷனாக இருந்தது. அதைப் பயன்படுத்தி உள்ளோம். இது போட்டோஷூட் ஸ்டில்தான். ஆனால், இதில் நிறைய மாற்றங்கள் செய்துள்ளோம். சஞ்சய் தத்தின் பிறந்த நாளில் அந்த லுக்கை வெளியிட்டதில் மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார்.

    சண்டைக் காட்சி

    சண்டைக் காட்சி

    லாக்டவுன் காரணமாக, இதன் ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது. கொரோனா பிரச்னைகள் முடிவடைந்ததும் சண்டைக் காட்சி ஒன்றை ஐதராபாத்தில் செட் அமைத்து படமாக்க உள்ளனர். அதோடு படம் முடிவடைய இருக்கிறது. முதலில் அக்டோபர் 23 ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தனர். ஆனால், இப்போது ரிலீஸ் மாற்றி வைக்கப்படும் என்று தெரிகிறது.

    English summary
    Sanjay Dutt's Adheera is inspired by vikings and the things they did: KGF filmmaker Prashanth Neel.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X