Don't Miss!
- News
வாட்ஸ்அப்ல கட்டுக்கதைகளை சொல்லுவாங்க.. நம்பாதீங்க.. மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அட்வைஸ்!
- Automobiles
மாருதி, ஹூண்டாயை அண்ணாந்து பாக்க வைத்த டாடா! சம்பவம் லோடிங்! தளபதி 67-ஐ விட எதிர்பார்ப்பு எகிறிகிட்டே போகுது!
- Sports
டி20 வரலாற்றில் இந்தியாவின் மகத்தான வெற்றி.. 3வது டி20ல் சுப்மன் கில் தந்த ஷாக்.. ஆடிப்போன நியூசி!
- Finance
மூலதன செலவு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. நிதியமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க ஆசைப்படுறீங்களா? அப்ப இந்த உணவுகளை தெரியாமகூட சேர்த்து சாப்பிடாதீங்க!
- Technology
அந்த ஹார்திக் பாண்டியா போன் நியாபகம் இருக்கா? அறிமுக தேதி உறுதி! விலை இதுதானா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
தீப்பொறி பறக்க மாஸ் காட்டும் யாஷ்... ‘’கேஜிஎஃப் 2 மேக்கிங் வீடியோ’’
சென்னை : கே.ஜி.எஃப். சாப்டர் 2 திரைப்படத்தின் மேக்கிங் வீடியோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
யாஷ் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், ரவீனா டண்டன் , சஞ்சய் தத், ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கடந்த 14ஆம் தேதி வெளியாகி முதல் நாளில் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் ஆனது. ஒரே வாரத்தில் ரூ.700 கோடிக்கு மேல் வசூல் ஆன நிலையில் தற்போது 1000 கோடி என்ற மைல்கல்லை எட்டியுள்ளது.
பயணிகள்
கவனிக்கவும்
விமர்சனம்...கவனிக்கப்பட்டதா?
காற்றில்
விடப்பட்டதா?

கே.ஜி.எஃப் சாப்டர் 2
கே.ஜி.எஃப் படத்தின் முதல் பாகத்தில் தங்க சுரங்கத்தை தன் வசம் வைத்திருந்த கருடனை கொலை செய்து கே.ஜி.எஃப் யை யஷ் கைப்பற்றினார். அதன் தொடர்ச்சியாக 2ஆம் பாகம் தொடர்கிறது. கே.ஜி.எஃப் பில் வாழ்ந்து வரும் மக்களுக்கு நல்லது செய்து தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்து வருகிறார் யாஷ். கே.ஜி.எஃப் பை பிடிக்க யாஷ்க்கு முன்னால் ஆசைப்பட்டு வந்தவர்கள், யாஷை கொலை செய்ய திட்டம் போடுகிறார்கள். இறுதியில் கே.ஜி.எஃப்பை யார் கைப்பற்றுகிறார்கள் என்பது தான் கதை.

தெறிக்கவிட்ட யாஷ்
படத்தை பார்த்த ரசிகர்கள் படத்தை வெகுவாக புகழ்ந்து வருகின்றனர். யாஷ் சும்மா தெறிக்க விட்டு இருக்காரு, முதல் பாகத்தை பார்த்துவிட்டு, செகண்டு பார்ட் பார்த்தே ஆகணும்னு வந்தேன். யாஷை தவிர வேறு யாராலயும் இப்படி நடிக்க முடியாது, அவரது நடிப்பை புகழ வார்த்தைகளே இல்லை. அம்மா சென்டிமெண்ட் தான் படமே. இயக்குநரை விட எடிட்டர் தான் ஒவ்வொரு காட்சியையும் ரசித்து ரசித்து பார்த்தனர்.

மேக்கிங் வீடியோ
இந்த நிலையில் படத்தின் மேக்கிங் வீடியோவை தயாரிப்பு நிறுவனமான ஹோம்பலே ஃபிலிம்ஸ் வெளியிட்டு வருகிறது. முதல் வீடியோ இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் கேமரா டிபார்ட்மென்ட்டின் பணிகள் குறித்த விபரங்கள் இடம்பெற்றுள்ளன. ஒளிப்பதிவாளர் புவன் கவுடா மற்றும் அவரது உதவியாளர்கள் படப்பிடிப்பு குறித்த சுவாரசியமான தகவல்களை அளித்துள்ளனர்.

விரைவில் கே.ஜி.எஃப். 3
இயக்குனர் பிரசாந்த் நீல் தற்போது பிரபாஸ் நடிக்கும் சலார் படத்தை இயக்கி வருகிறார். இதன்பின்னர் அவர் ஜூனியர் என்.டி.ஆருடன் ஒரு படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்பின்னர் கே.ஜி.எஃப். 3 படத்தின் பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.