வன்முறை தூக்கலான கேஜிஎப் 2 படம்... படத்தோட சென்சார் முடிஞ்சாச்சு!

சென்னை : நடிகர் யாஷ் நடிப்பில் வெளியான கேஜிஎப் 2 படம் மிகச்சிறந்த வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது படத்தின் இரண்டாவது பாகம் வரும் ஏப்ரல் 14ம் தேதி பான் இந்தியா படமாக ரிலீசாக உள்ளது. இந்தப் படத்தின் ட்ரெயிலர் சமீபத்தில் வெளியாகி மிகச்சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது.

தாறுமாறு வெற்றி பெற்ற கேஜிஎப்

தாறுமாறு வெற்றி பெற்ற கேஜிஎப்

கன்னடத்தில் யாஷ் நடிப்பில் உருவாகி பான் இந்தியா படமாக வெளியானது கேஜிஎப் சாப்டர் ஒன். இந்தப் படத்தை பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார். படம் தாறுமாறான வெற்றியை பெற்றது. சிறப்பான திரைக்கதை, மிரட்டலான கதை நகர்வு, வசனங்கள் என சிறப்பாக வெளியான இந்தப் படத்தை ரசிகர்கள் கொண்டாடினர்.

கேஜிஎப் சாப்டர் 2 படம்

கேஜிஎப் சாப்டர் 2 படம்

இதையடுத்து தற்போது இந்தப் படத்தின் இரண்டாவது பாகமும் உருவாகியுள்ளது. படத்தின் சஞ்சய் தத் வில்லனாக நடித்துள்ளார். முக்கியமான கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை ரவீனா டான்டனும் நடித்துள்ளார். கொரோனா காரணமாக தொடர்ந்து தள்ளிப் போன இந்தப் படம் தற்போது ஏப்ரல் 14ம் தேதி உலகளவில் ரிலீசாக உள்ளது.

பான் இந்தியா படமாக ரிலீஸ்

பான் இந்தியா படமாக ரிலீஸ்

படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் பான் இந்தியா படமாக ரிலீசாக உள்ளது. கேரளாவில் படத்தை நடிகர் பிரித்விராஜ் வெளியிட உள்ளார். சமீபத்தில் படத்தின் மிரட்டலான ட்ரெயிலர் வெளியாகியுள்ளது. படத்தின் பாடல்களும் முன்னதாக வெளியாகி சூப்பரான வரவேற்பை பெற்றுள்ளது.

பீஸ்ட் படத்துடன் மோதலா?

பீஸ்ட் படத்துடன் மோதலா?

நடிகர் விஜய்யின் பீஸ்ட் படம் வரும் ஏப்ரல் 13ம் தேதி ரிலீசாக உள்ள நிலையில், இந்த இரண்டு படங்களும் மோதவுள்ளதாக விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர். இதனிடையே இதுகுறித்து பதிலளித்த யாஷ், விஜய் மிகப்பெரிய ஸ்டார் என்றும் இது எலெக்ஷன் இல்லை, அதனால் இரண்டு படங்களும் மோதலில் இல்லை என்றும் வீடியோ மூலம் தெரிவித்திருந்தார்.

விஜய் குறித்து யாஷ்

விஜய் குறித்து யாஷ்

இரண்டு படங்களையும் ரசிகர்கள் பார்க்கலாம் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார். விஜய் மீது மிகுந்த மரியாதை உள்ளதாகவும் அவரது படத்தை தான் கண்டிப்பாக பார்ப்பேன் என்றும் தெரிவித்த யாஷ், அதேபோல விஜய் ரசிகர்களும் தனது படத்தை கண்டிப்பாக பார்ப்பார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

சென்சார் முடிந்த கேஜிஎப் சாப்டர் 2

சென்சார் முடிந்த கேஜிஎப் சாப்டர் 2

இதனிடையே கேஜிஎப் சாப்டர் 2 படத்தின் சென்சார் தற்போது முடிக்கப்பட்டுள்ளது. படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. படத்தின் ரன் டைம் 2 மணிநேரங்கள் மற்றும் 48 நிமிடங்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் ட்ரெயிலர் உள்ளிட்டவற்றை பார்க்கும்போது படத்தில் வன்முறைக் காட்சிகள் தூக்கலாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் படத்திற்கு யூஏ சான்றிதழ் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X