இரவு பகல் பார்க்காமல் வேலை... புதிய மேக்கிங் வீடியோ வெளியிட்ட கேஜிஎப் 2 டீம்

ஐதராபாத் : யஷ் நடிப்பில் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் கடந்த மாதம் 14ம் தேதி திரையரங்குகளில் ரிலீசானது கேஜிஎப் 2. முன்னதாக இந்தப் படத்தின் மிரட்டலான முதல் பாகம் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இரண்டாவது பாகமும் 1000 கோடி ரூபாய் வசூலை தாண்டியுள்ளது.

கேஜிஎப் சாப்டர் 2

கேஜிஎப் சாப்டர் 2

நடிகர் யஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், ரவீணா டன்டன் ஆகியோர் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே மிரட்டலான ரெஸ்பான்சை பெற்றுள்ளது கேஜிஎப் 2. இந்தப் படத்தின் முதல் பாகம் கடந்த 2018ல் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்ததையடுத்து இரண்டாவது பாகம் தற்போது வெளியாகியுள்ளது.

ரசிகர்கள் நம்பிக்கை

ரசிகர்கள் நம்பிக்கை

படத்தில் யஷ் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். சர்வதேச அளவில் கன்னட மொழிப் படங்களை எடுத்து செல்வதே தன்னுடைய விருப்பம் என்று முன்னதாக அவர் தெரிவித்திருந்த நிலையில், இந்த ஆசையை யஷ் மற்றும் பிரஷாந்த் கொண்டு செல்வார்கள் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

சிறப்பான காம்பினேஷன்

சிறப்பான காம்பினேஷன்

தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது பாகத்தில் மட்டுமில்லாமல் முதல் பாகத்திலும் இவர்களது காம்பினேஷன் மிகச் சிறப்பாக வொர்க் அவுட் ஆனது. ரசிகர்கள் இந்த கூட்டணியின் வெளியீட்டை கொண்டாடினர். படத்தின் ஒவ்வொரு காட்சிக்காகவும் இவர்களது மெனக்கெடல் சிறப்பாக வெளிப்பட்டுள்ளது.

கடுமையான உழைப்பு

கடுமையான உழைப்பு

திரைக்கதையில் மட்டுமில்லாமல் சிங்கிள் ஷாட்டிலும் பிரஷாந்த் நீலின் உழைப்பு அப்பட்டமாக தெரியவருகிறது. இந்தப் படத்தில் ஆதிரா என்ற கேரக்டரில் சஞ்சய் தத்தும் மிரட்டியுள்ளார். படத்தின் வெற்றிக்கு பவர்புல்லான இந்த வில்லன் கேரக்டரும் முக்கியமான பங்கு வகித்துள்ளது.

2வது மேக்கிங் வீடியோ

2வது மேக்கிங் வீடியோ

படம் மட்டுமில்லாமல் படத்தின் மேக்கிங்கும் சிறப்பாக காணப்படுகிறது. சமீபத்தில் படத்தின் முதல் மேக்கிங் வீடியோ வெளியிடப்பட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் படத்தின் இரண்டாவது மேக்கிங் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இதில் மேக்கப் ஆடை கலைஞர்கள் தங்களது அனுபவங்களை பகிர்ந்துள்ளனர்.

Recommended Video

KGF 2 First Day Second Show Audience Review | Yash | KGF 2 Public Review | Filmibeat tamil
மேக்கப், ஆடை கலைஞர்கள் மெனக்கெடல்

மேக்கப், ஆடை கலைஞர்கள் மெனக்கெடல்

மேலும் வீடியோவில் ஒவ்வொரு துணை கலைஞர்கள், முக்கிய நடிகர்களுக்கும் அவர்கள் போடும் மேக்கப் மற்றும் ஆடைகளுக்காக அவர்கள் மேற்கொண்ட மெனக்கெடல் உள்ளிட்டவை அப்பட்டமாக தெரியவருகிறது. இரவு பகல் பாராமல் இதற்காக உழைத்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X