ராக்கி பாயின் இரு கன்னத்திலும் நச்சென முத்தம்.. இது வெறும் ஆரம்பம் தான் என தெறிக்கும் ட்வீட்!

பெங்களூரு: கேஜிஎஃப் 2 இயக்குநர் பிரசாந்த் நீல் மற்றும் Hombale Films தயாரிப்பாளர் இருவரும் இணைந்து ராக்கி பாயின் இரு கன்னத்தில் நச்சென முத்தம் கொடுத்த புகைப்படம் டிரெண்டாகி வருகிறது.

மொத்த பணத்தையும் படத்தில் முதலீடு செய்து மிகப்பெரிய பிரம்மாண்ட படைப்பை Hombale Films நிறுவனத்தின் தயாரிப்பாளர் விஜய் கிரகந்துர் இயக்குநர் பிரசாந்த் நீல் மற்றும் யஷ் துணையுடன் கொடுத்துள்ளார்.

1000 கோடி வசூலை நோக்கி கேஜிஎஃப் 2 சென்றுக் கொண்டிருக்கும் நிலையில், சின்னதாக ஒரு கேக்கை மட்டும் வெட்டி வெறும் மூவர் மட்டுமே சக்சஸ் பார்ட்டியை எளிமையாக கொண்டாடி உள்ளனர்.

1000 கோடியை நோக்கி

1000 கோடியை நோக்கி

இந்தி பெல்ட்டில் மட்டும் 300 கோடி வசூலை அள்ளிய கேஜிஎஃப் 2 படம் பல இடங்களில் இரண்டாவது வார இறுதி நாட்களிலும் காலை 4 மணி சிறப்பு காட்சிகளுடன் திரையிடப்பட்டு, இன்னமும் பலருக்கு டிக்கெட் கிடைக்காமல் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், படத்தை பார்த்த பலரும் ரிப்பீட் மோடில் படம் பார்த்து வருவதாகவும் கூறுகின்றனர்.

சரித்திரத்தில் சாண்டில்வுட்

சரித்திரத்தில் சாண்டில்வுட்

தென்னிந்திய படங்களிலேயே கன்னட படங்களை பலரும் குறைத்து மதிப்பிட்டு மட்டம் தட்டுவார்கள். கன்னட ஹீரோக்களை கிண்டல் செய்து வந்தனர். ஆனால், அதையெல்லாம் முறியடிக்கும் விதத்தில் எங்க கிட்டயும் யஷ் இருக்கார். பிரசாந்த் நீல் இருக்காரு என இறங்கி அடித்து பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என ஆல் ஏரியாவிலும் கில்லியாக மாறி உள்ளார் ராக்கி பாய்.

இதுதான் சக்சஸ் பார்ட்டியா

இதுதான் சக்சஸ் பார்ட்டியா

இரு வாரங்களாக தொடர்ந்து ஒரு நாள் கூட டல் அடிக்காமல் மிகப்பெரிய வசூல் வேட்டையை படம் நிகழ்த்தி உள்ள நிலையில், பெரிய ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் சக்சஸ் பார்ட்டி வைப்பார்கள் என பார்த்தால் ரொம்பவே கஞ்சத்தனமாக ஒரே ஒரு சின்ன கேக்கை வெட்டி கொண்டாடியுள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.

இரு கன்னத்திலும் முத்தம்

இரு கன்னத்திலும் முத்தம்

இன்னொரு புகைப்படத்தில் நடிகர் யஷ்ஷுக்கு தயாரிப்பாளரும் இயக்குநரும் இணைந்து ஆளுக்கொரு கன்னத்தில் நச்சென முத்தம் கொடுத்து அன்பு மழை பொழிந்துள்ள புகைப்படத்தையும் ஷேர் செய்து டிரெண்ட் செய்து வருகின்றனர். இந்த மூவரின் கடின உழைப்பு தான் இத்தனை பெரிய சரித்திர வெற்றிக்கு காரணம் என இந்த புகைப்படங்களே தெரிவிக்கின்றன.

இது வெறும் ஆரம்பம் தான்

இது வெறும் ஆரம்பம் தான்

மேலும், இது வெறும் ஆரம்பம் தான் என ட்வீட் போட்டு இன்னும் பெரிய வெற்றியை கேஜிஎஃப் 3 படத்தின் மூலம் கொடுக்க உள்ளதை மறைமுகமாக கூறி இருக்கின்றனர். ஆயிரம் கோடி கலெக்‌ஷன் வந்த உடன் மிகப்பெரிய சக்சஸ் பார்ட்டி வைத்து அனைத்து நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களை கெளரவிக்கவும் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மான்ஸ்டர் பாடல் ரிலீஸ்

மான்ஸ்டர் பாடல் ரிலீஸ்

இந்த கொண்டாட்டத்தை முன்னிட்டு ரசிகர்களுக்காக இன்று கேஜிஎஃப் 2 படத்தின் மான்ஸ்டர் பாடல் வீடியோவைவும் வெளியிட்டு அதகளம் செய்துள்ளனர். ராக்கி பாய் துப்பாக்கி எடுத்து சுடுவதும், அதீராவுடன் சண்டை போட்டு ஜெயிக்கும் காட்சிகள் என ஏகப்பட்ட படத்தின் பிரத்யேகமான காட்சிகள் இந்த பாடலில் இடம்பெற்றுள்ளன.

Recommended Video

Yashஐ Rocky Bhaiயாக தெரியும்...ஆனால் இப்படி யாருக்காவது தெரியுமா ?|Filmibeat Tamil
பிரபாஸ் பட பிசினஸ்

பிரபாஸ் பட பிசினஸ்

கேஜிஎஃப் 2 படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், ஸ்ருதிஹாசன் நடிப்பில் உருவாகி வரும் சலார் படத்தின் ப்ரீ பிசினஸ் இப்பவே ஆரம்பமாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. படம் ரிலீசுக்கு முன்பே 500 கோடிக்கும் அதிகமாக ப்ரீ ரிலீஸ் பிசினஸ் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரபாஸ் மற்றும் பிரசாந்த் நீல் காம்பினேஷன் என்பதால், சலார் படத்தை பலரும் சலாம் போட்டு வாங்கி செல்வார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X