வயலன்ஸ்.. வயலன்ஸ்… கே.ஜி.எஃப் 2 கொல மாஸ்… கொண்டாடும் ரசிகர்கள் !
சென்னை : கே.ஜி.எஃப் 2 திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் இன்று பிரம்மாண்டமாக வெளியாகி உள்ளது.
உலகம் முழுவதும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைகளில் இப்படத்தை வெளியிட்டுள்ளனர். இப்படத்தின் முதல் காட்சியை பார்த்த ரசிகர்கள் படத்தை வெகுவாக புகழ்ந்து வருகின்றனர்.
கே.ஜி.எஃப் சாப்டர் 2 படம் பார்த்துவிட்டு வெளியே ரசிகர்கள் படம் மாஸ், யாஷ் சும்மா தெறிக்கவிட்டு இருக்காரு, படத்தை புகழ வார்த்தைகேளே இல்லை என்று கூறிவருகின்றனர்.

கே.ஜி.எஃப் சாப்டர் 2
கே.ஜி.எஃப் படத்தின் முதல் பாகத்தில் தங்க சுரங்கத்தை தன் வசம் வைத்திருந்த கருடனை கொலை செய்து கே.ஜி.எஃப்- யை யஷ் கைப்பற்றினார். அதன் தொடர்ச்சியாக 2ஆம் பாகம் தொடர்கிறது. கே.ஜி.எஃப் பில் வாழ்ந்து வரும் மக்களுக்கு நல்லது செய்து தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்து வருகிறார் யஷ். கே.ஜி.எஃப் பை பிடிக்க யஷ்க்கு முன்னால் ஆசைப்பட்டு வந்தவர்கள், யாஷை கொலை செய்ய திட்டம் போடுகிறார்கள். இறுதியில் கே.ஜி.எஃப்பை யார் கைப்பற்றுகிறார்கள் என்பது தான் கதை.

தெறிக்கவிட்ட யாஷ்
இன்று வெளியான படத்தை பார்த்த ரசிகர்கள் படத்தை வெகுவாக புகழ்ந்து வருகின்றனர். யாஷ் சும்மா தெறிக்க விட்டு இருக்காரு, முதல் பாகத்தை பார்த்துவிட்டு, செகண்டு பார்ட் பார்த்தே ஆகணும் வந்தே. யாஷை தவிர வேறு யாராலயும் இப்படி நடிக்க முடியாது, அவரது நடிப்பை புகழ வார்த்தைகளே இல்லை. அம்மா சென்டிமெண்ட் தான் படமே. இயக்குநரை விட எடிட்டர் தான் ஒவ்வொரு காட்சியையும் ரசித்து ரசித்து பண்ணி இருக்காரு என்றபடம் பார்த்த ஒரு ரசிகை கூறினார்.

கொலமாஸ்
படத்தை பார்க்க பார்க்க ஒவ்வொரு சீனும், கைத்தட்டல் பறக்குது. முதல் பார்ட்டே மெர்சல் , செக்கெண்ட் பார்ட் அதுக்கும் மேல கொலமாஸ். படம்னா இதுதான் தமிழ் ஹீரோஸ் எல்லாம் இந்த படத்தைப்பார்த்து கத்துக்கனும். படத்துல மைனசுனு சொல்றதுக்கு எதுவுமே இல்லை சும்மா அடித்து தூக்கிட்டாங்கப்பா.

படுபயங்கரமா இருக்கு
கே.ஜி.எஃப் 2, கே.ஜி.எஃப் ஒன்னைவிட படுபயங்கரமா இருக்கு, பக்காவான ஒரு படம், ஒவ்வொரு கேரக்டரும் போட்டி போட்டுக்கொண்டு நடித்திருக்கிறார்கள். படத்துல கிளைமாக்ஸ் ஒரு செம ட்விஸ்ட் இருக்கு, அதசொல்லிட்டா த்ரில் இருக்காது நீங்களே பாருங்க என்றார் ஒரு ரசிகர்.

வயலன்ஸ்.. வயலன்ஸ்...
வயலன்ஸ் எனக்கு பிடிக்காது ஆனால் வயலேன்ஸ்க்கு என்னை ரொம்ப பிடிக்கும் என்று யாஷின் வசனம் மரண மாஸ். முதல் பாகத்தில் கருடனை படத்தில் பாதிக்கு மேல் தான் காட்டி இருப்பார்கள் ஆனால் இரண்டாம் பாகத்தில் ஆதிரா என்னும் கதாபாத்திரத்தில் ஆரம்பத்திலிருந்தே மிரட்டுகிறார் சஞ்சய் தத். என்று புகழ்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











