இது எப்படி இருக்கு.. கே.ஜி.எஃப் அதீரா லுக்கில் ரஜினிகாந்த்.. தலைவன் வேற ரகம் பார்த்து உஷாரு!

சென்னை: கே.ஜி.எஃப் அதீரா லுக்கில் நடிகர் ரஜினிகாந்த் இருப்பது போன்ற ஃபேன் எடிட் போட்டோ வைரலாகி வருகிறது.

Recommended Video

KGF Amma Archana Ultra model Picture • KGF 2 • Yash

நடிகர் யஷ் நடிப்பில் உருவாகி வரும் கே.ஜி.எஃப் படத்தின் சாப்டர் 2 திரைப்படத்தின் அதிர வைக்கும் அதீரா போஸ்டர் சமீபத்தில் வெளியானது.

முதல் பாகத்தில் ரகசியமாக வைக்கப்பட்டு இருந்த அந்த கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடித்துள்ளார்.

தங்க சுரங்கம்

தங்க சுரங்கம்

கோலார் தங்க சுரங்கத்தை மையமாக வைத்து, தங்க சுரங்கம் ஒன்றில் வேலை செய்ய பணியாட்களை கொடுமைப்படுத்தும் ஒரு கூட்டத்தை, அந்த இடத்தில் பிறந்து, மும்பையில் அநாதையாக வளரும் ஒரு சிறுவன், டானாக மாறி, மீண்டும் அந்த இடத்தில் கொத்தடிமைகளாக கிடக்கும் மக்களின் காவலனாய் மாறுவது தான் கே.ஜி.எஃப் படத்தின் கதை.

எமர்ஜென்சி பீரியட்

எமர்ஜென்சி பீரியட்

இந்த படம் வரலாற்று பின்னணிகளுடன் பின்னி பிணைக்கப்பட்டு, புனைவு படமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. முதல் பாகத்தில், காட்டப்படாத இந்திரா காந்தியின் எமர்ஜென்சி பீரியட் மற்றும் வெளிநாட்டில் கேங்ஸ்டராக இருக்கும் வில்லன் அதீராவையும் இரண்டாம் பாகத்தில் காட்டவுள்ளனர். கே.ஜி.எஃப் சாப்டர் 2வில் இந்திரா காந்தியாக ரவீனா டாண்டன் நடித்துள்ளார்.

அதீரா ஃபர்ஸ்ட் லுக்

அதீரா ஃபர்ஸ்ட் லுக்

முன்னா பாய் எம்.பி.பி.எஸ்., பாகி, ஜோடி நம்பர் ஒன், பானிபட் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும் கே.ஜி.எஃப் சாப்டர் 2 படத்தில் வில்லன் அதீராவாக நடித்துள்ளார். கடந்த ஜூலை 29ம் தேதி கொண்டாடப்பட்ட சஞ்சய் தத்தின் 61வது பிறந்தநாளை முன்னிட்டு அதீரா ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது.

உஷாரான இயக்குநர்

உஷாரான இயக்குநர்

போர் காட்சிகள் நிறைந்த பிரபல ஆங்கில சீரியலான வைக்கிங்ஸ் தொடரில் வரும் லக்னர் ரோத்ப்ரோக் கதாபாத்திரத்தில் இருந்து, இந்த லுக்கை காப்பி அடித்ததாக, ரசிகர்கள் கண்டுபிடித்து கலாய்ப்பார்கள் என்பதை அறிந்து கொண்ட இயக்குநர் பிரசாந்த் நீல், முன்னெச்சரிக்கையாக போஸ்டரை வெளியிடும் போதே, இது வைக்கிங் சீரியலின் இன்ஸ்பிரேஷன் என கிரெடிட் கொடுத்து விட்டார்.

அதீராவாக அண்ணாத்த

அதீராவாக அண்ணாத்த

இந்தியளவில் கே.ஜி.எஃப் இரண்டாம் பாகத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. அதிலும், அந்த எமகாதக அதீராவை காண்பதற்காக பலரும் காத்திருக்கின்றனர். இந்நிலையில், சஞ்சய் தத்தின் மிரட்டல் லுக்கில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இருப்பதாக ரசிகர்கள் உருவாக்கிய ஃபேன் மேட் போஸ்டர் ஒன்று வைரலாகி வருகிறது.

அஜித்தையும் விடவில்லை

அஜித்தையும் விடவில்லை

அதீரா ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியான சில மணி நேரங்களிலேயே தல அஜித்தையும் அந்த அதீரா லுக்கில் எடிட் செய்தும் தல ரசிகர்கள் தாறுமாறு பண்ணி வந்தது குறிப்பிடத்தக்கது. அடுத்த ஆண்டு தியேட்டரில், ராக்கி பாய்க்கும், வில்லன் அதீராவுக்கும் இடையே நடக்கவுள்ள மிகப்பெரிய யுத்தத்தை காண ரசிகர்கள் வெறித்தன வெயிட்டிங்கில் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X