சிங்கத்தோட கர்ஜனை கேட்க போற நாள்.. கேஜிஎஃப் சாப்டர் 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு.. மாஸ் லுக்கில் யஷ்!
சென்னை: கன்னட நடிகர் யஷ் நடிப்பில் உருவாகி உள்ள கேஜிஎஃப் சாப்டர் 2 படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு வெளியாக வேண்டிய கேஜிஎஃப் சாப்டர் 2 படமும் கொரோனா காரணமாக தள்ளிப் போனது.
இந்நிலையில், தற்போது அந்த படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு புதிய போஸ்டருடன் வெளியிட்டுள்ளது.

மான்ஸ்டர் ஹிட்
நூறு கோடி வசூலை எல்லாம் பார்த்திராத கன்னட திரையுலகை உலகையே திரும்பி பார்க்க வைத்த பெருமை கேஜிஎஃப் படத்திற்கு சேரும். 250 கோடிக்கும் மேல் வசூலீட்டி இந்திய திரையுலகை பிரமிக்க வைத்தது. இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யஷ், ஸ்ரீனிதி ஷெட்டி நடிப்பில் இந்த படம் உருவானது.

கேஜிஎஃப் சாப்டர் 2
முதல் பாகத்தின் மான்ஸ்டர் வெற்றியை பார்த்த ரசிகர்கள் ராக்கி பாயின் அடுத்த அதிரடியை காண மிகவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். கொரோனா பரவல் காரணமாக உலகளவில் ஏகப்பட்ட பெரிய படங்களின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது போலவே கேஜிஎஃப் சாப்டர் 2 படத்தின் ரிலீஸ் தேதியும் தள்ளிப் போனது.

எப்போ ரிலீஸ்
இந்நிலையில், நேற்று கேஜிஎஃப் சாப்டர் 2 படத்தின் ரிலீஸ் தேதியை தயாரிப்பு நிறுவனமான ஹம்பலே பிலிம்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. வரும் ஜூலை மாதம் 16ம் தேதி பான் இந்திய படமாக கேஜிஎஃப் சாப்டர் 2 உலகம் முழுவதும் ரிலீசாகவுள்ளது. ராக்கி பாய் மற்றும் அதீராவின் கிளைமேக்ஸ் சண்டையை காண ரசிகர்கள் வெயிட்டிங்.
Recommended Video

பிரம்மாண்ட சிங்கம்
சமீபத்தில் வெளியான கேஜிஎஃப் சாப்டர் 2 டீசர் பல மில்லியன்களை கடந்து சாதனை படைத்தது. இந்நிலையில், ரிலீஸ் தேதி அறிவிப்புடன் புதிய போஸ்டர் ஒன்றும் வெளியாகி உள்ளது. பிரம்மாண்ட சிங்க சிலைக்கு முன்பு ராக்கி பாய் இன்னொரு சிங்கமாக நிற்கும் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. முதல் பாகத்தை விட இரண்டாவது பாகம் இன்னமும் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











