போஸ்டருடன் மாஸாக வெளியான கேஜிஎஃப் 2 ரிலீஸ் தேதி... எப்போ தெரியுமா

சென்னை : யாஷின் மாஸ் ஆக்ஷன் காட்சிகளுடன் 2018 ம் ஆண்டு வெளியாகி வசூலில் மிரட்டிய பான் இந்தியன் படம் என்றால் அது கேஜிஎஃப் : சேப்டர் ஒன்று தான். எந்த அளவிற்கு வசூலை பெற்றதோ, அதே அளவு சர்ச்சைகளையும், எதிர்ப்புக்களையும் இந்த படம் சம்பாதித்தது.

ஃபஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது முதல் இந்த படத்திற்கு எதிர்ப்பு எழுந்தது. ஹீரோவான யாஷ் சிகரெட் பிடிப்பது போ்ற காட்சிகள் எக்கசக்கமாக இருந்தது தான் இந்த ஒட்டுமொத்த சர்ச்சைக்கும் காரணம். ஆனால் சர்ச்சை, எதிர்ப்புக்களை மீறி ரசிகர்களின் பெரும் ஆதரவுடன் இந்த படம் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது.

இதைத் தொடர்ந்து கேசிஎஃப் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளாக இந்த படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். ஆனால் கொரோனா உள்ளிட்ட பல காரணங்களால் இந்த படத்தின் ஷுட்டிங் மட்டுமல்ல ரிலீஸ் தேதியும் தாமதமாகி வந்தது.

ரிலீஸ் எப்போ

ரிலீஸ் எப்போ

இந்நிலையில் பிரஷாந்த் நீல் இயக்கி உள்ள கேஜிஎஃப் : சேப்டர் 2 ஐ எப்போது ரிலீஸ் என்பதை போஸ்டருடன் இன்று அதிகாரப்பூர்வமாக படக்குழு வெளியிட்டுள்ளது. 2022 ம் ஆண்டு ஏப்ரல் 14 ம் தேதி உலகம் முழுவதும் தியேட்டர்களில் இந்த படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தியேட்டர் ரிலீஸ்

தியேட்டர் ரிலீஸ்

புதிய படங்கள் ஓடிடி.,யில் ரிலீசாவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கேஜிஎஃப் 2 தியேட்டரில் தான் ரிலீசாகும் என படக்குழு உறுதியாக இருந்தது. அதனால் ஏற்கனவே வாக்குறுதி அளித்தப்படி தியேட்டரிலேயே ரிலீஸ் செய்ய உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. கேஜிஎஃப் படக்குழுவின் இந்த அறிவிப்பு ரசிகர்களை மட்டுமின்றி தியேட்டர் உரிமையாளர்கள், ஊழியர்கள் என அனைவரையும் மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

 மகிழ்ச்சியில் தியேட்டர் உரிமையாளர்கள்

மகிழ்ச்சியில் தியேட்டர் உரிமையாளர்கள்

கடந்த 6 மாதங்களாக கொரோனா இரண்டாம் அலை காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால் தியேட்டர் உரிமையாளர்கள், அதை நம்பி இருக்கும் ஊழியர்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். தற்போது தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் மக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். இது போன்ற பிரம்மாண்ட படங்கள், மாஸ் ஹீரோக்களின் படங்கள் தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட்டால் அது ரசிகர்களை தியேட்டருக்கு வர வைக்கும் என தியேட்டர்கள் உரிமையாளர்கள் நம்புகிறார்கள்.

அசத்தல் போஸ்டர்

அசத்தல் போஸ்டர்

படத்தில் நடித்துள்ள நடிகர்கள் அனைவரும் இடம்பெறும் வகையில் போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது ரசிகர்களுக்கு பெரிய ட்ரீட்டாக பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் யாஷ், சஞ்சய் தத், ரவீணா டன்டான், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஒரு தாய், குழந்தையை கட்டிக் கொண்டு அழுவதைப் போன்ற காட்சி இடம்பெற்றுள்ளதால் இதில் நிச்சயம் அம்மா சென்டிமென்ட் காட்சிகள் நிறைய இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 சென்ட்மென்ட் கன்ஃபார்ம்

சென்ட்மென்ட் கன்ஃபார்ம்

கேஜிஎஃப் முதல் பாகத்திலும் மனதை தொடும் அம்மா- மகன் சென்டிமென்ட் காட்சிகள் நிறைய இடம்பெற்றிருக்கும். இதனால் சென்டிமென்ட், ஆக்ஷன் இரண்டையும் பார்க்க ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். தியேட்டர் ரிலீஸ் என்பதால் படத்தின் மீதான ஆர்வம் மேலும் அதிகரித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X