'கேஜிஎப்: சாஃப்டர் 2' போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகள் ஸ்டார்ட்.. ராக்கி பாய்-க்கு வேற லெவல் பிஜிஎம்!
சென்னை: 'கே.ஜி.எப்: சாப்டர் 2' படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தொடங்கியுள்ளதாக அதன் தயாரிப்பாளர் கார்த்திக் கவுடா தெரிவித்துள்ளார்.
Recommended Video
யஷ், ஶ்ரீனிதி ஷெட்டி நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான படம் 'கே.ஜி.எப்'.
பீரியட் படமான இது, கன்னடம் தவிர தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு மொழிகளிலும் ரிலீஸ் ஆனது.

கேஜிஎப்: சாப்டர் 2
பிரமாண்ட பட்ஜெட்டில் உருவான இந்தப் படம், சூப்பர் ஹிட்டானது. தமிழில் இந்தப் படத்தை நடிகர் விஷால் வெளியிட்டார். இப்போது இதன் இரண்டாம் பாகம் இன்னும் அதிக பட்ஜெட்டில், கேஜிஎப்: சாப்டர் 2 என்ற பெயரில் உருவாகி வருகிறது. முதல் பாகத்தை இயக்கிய பிரசாந்த் நீல், இதை இயக்குகிறார். முதல் பாகத்தில் நடித்த ஶ்ரீனிதி ஷெட்டி, ஆனந்த் நாக், மாளவிகா அவினாஷ் உட்பட பலர் நடிக்கின்றனர்.

ரவீணா டாண்டன்
இந்தி நடிகர் சஞ்சய் தத், அதீரா என்ற கேரக்டரில் வில்லனாக நடிக்கிறார். முதல் பாகம் ஹிட்டானதால், இரண்டாம் பாகத்துக்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ரவீணா டாண்டன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த கேரக்டரில் நடிக்க முதலில், ரம்யா கிருஷ்ணனிடம் கேட்கப்பட்டதாகவும் அவர் அதிக சம்பளம் கேட்டதால் படக்குழுவினர் ரவீணாவை ஒப்பந்தம் செய்ததாகவும் செய்திகள் வெளியானது.

டிஜிட்டல் ரைட்ஸ்
படத்தை அக்டோபர் மாதம் வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால், கொரோனா லாக்டவுன் காரணமாக ரிலீஸ் தள்ளிப் போகும் என்று தெரிகிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ், ரூ.55 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக சமீபத்தில் செய்தி வெளியானது. அமேசான் நிறுவனம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாள மொழிகளுக்கும் சேர்த்து, இந்த தொகைக்கு வாங்கியுள்ளது என்கிறார்கள்.

ஸ்பெஷல் பிஜிஎம்
இந்நிலையில் இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் ஆரம்பமாகியுள்ளன. இதைத் தயாரிப்பாளர் கார்த்திக் கவுடா தெரிவித்துள்ளார். இப்போது இசை சேர்ப்பு பணிகள் நடக்கின்றன. அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில், இயக்குனர் பிரசாந்த் நீல், ஒளிப்பதிவாளர் புவன் கவுடா, இசை அமைப்பாளர் ரவி பஸ்ருர் ஆகியோர் உள்ளனர். ஹீரோவான ராக்கி பாய் கேரக்டருக்கு ஸ்பெஷல் பிஜிஎம் போடப்படுவதாகக் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications