twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    யஷ் நடிக்கும் 'கே.ஜி.எப்: சாஃப்டர் 2'.. டிஜிட்டல் ரைட்ஸ் இவ்ளோ கோடியா? பரபரப்பாகும் திரையுலகம்!

    By
    |

    சென்னை: 'கேஜிஎப் சாப்டர் 2' படத்தின் டிஜிட்டல் உரிமையை, அமேசான் நிறுவனம் நினைத்துப் பார்க்காத தொகைக்கு வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

    Recommended Video

    KGF Yash Shared his son Ayush first Picture | Radhika Pandit

    யஷ் நடித்த 'கே.ஜி.எப்' படம் கன்னடம் தவிர தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு மொழிகளில் கடந்த 2018 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது.

    பிரமாண்ட பட்ஜெட்டில் உருவான இந்தப் படம், சூப்பர் ஹிட்டானது. இதை நடிகர் விஷால், தமிழில் வெளியிட்டார்.

    பெரிய குடும்பத்து ஹீரோயினுக்கு மாப்பிள்ளை பார்க்கிறாங்களாம்.. உறுதிப்படுத்திய நடிகையின் அப்பா! பெரிய குடும்பத்து ஹீரோயினுக்கு மாப்பிள்ளை பார்க்கிறாங்களாம்.. உறுதிப்படுத்திய நடிகையின் அப்பா!

    2 ஆம் பாகம்

    2 ஆம் பாகம்

    இப்போது இதன் இரண்டாம் பாகம் இன்னும் அதிக பட்ஜெட்டில், கேஜிஎப் சாப்டர் 2 என்ற பெயரில் உருவாகி வருகிறது. முதல் பாகத்தை இயக்கிய பிரசாந்த் நீல், இதையும் இயக்குகிறார். முதல் பாகத்தில் நடித்த ஶ்ரீனிதி ஷெட்டி ஹீரோயினாக நடிக்கிறார். ஆனந்த் நாக், மாளவிகா அவினாஷ் உட்பட பலர் நடிக்கின்றனர்.

    வில்லன் சஞ்சய் தத்

    வில்லன் சஞ்சய் தத்

    இந்தி நடிகர் சஞ்சய் தத், அதீரா என்ற கேரக்டரில் வில்லனாக நடிக்கிறார். முதல் பாகம் ஹிட்டானதால், இரண்டாம் பாகத்துக்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதை அதிகரிக்கும் வகையில், இந்த படத்தின் போஸ்டர்கள் அமைந்துள்ளதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். இந்தப் படத்தில் ரவீணா டாண்டன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

    ரவீணா டாண்டன்

    ரவீணா டாண்டன்

    இந்த கேரக்டரில் நடிக்க முதலில், ரம்யா கிருஷ்ணனிடம் கேட்கப்பட்டதாகவும் அவர் அதிக சம்பளம் கேட்டதால் படக்குழுவினர் ரவீணாவை ஒப்பந்தம் செய்ததாகவும் செய்திகள் வெளியானது. இதில் அவர் அரசியல்வாதியாக நடிப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், அதை ரவீணா மறுத்திருந்தார். இதன் டீசர் விரைவில் ரிலீஸ் ஆகப் போவதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருந்தது. ஆனால், அதை படக்குழு மறுத்திருந்தது.

    டிஜிட்டல் ரைட்ஸ்

    டிஜிட்டல் ரைட்ஸ்

    படத்தை அக்டோபர் மாதம் வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால், கொரோனா காரணமாக மொத்த திட்டங்களும் மாற்றப்பட உள்ளன. இந்நிலையில் இந்தப் படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ், ரூ.55 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அமேசான் நிறுவனம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாள மொழிகளுக்கும் சேர்த்து, இந்த தொகைக்கு வாங்கியுள்ளது என்கிறார்கள்.

    English summary
    Amazon Prime has supplied an quantity of 55 crores to seal the digital rights deal for KGF: Chapter 2
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X