யாஷ் இப்படி இருப்பாருன்னு நான் நினைக்கவே இல்லை… சரண் சொன்ன தகவல் !

சென்னை : வடசென்னை படத்தில் பிரபலமான நடிகர் சரண் சக்தி தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் கே ஜி எப் -2 திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இத்திரைப்படத்தில் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ்,சரண், மாளவிகா அரவிந்த், ராவ் ரமேஷ், ஈஸ்வரி ராய் ஆகியோர் நடித்துள்ளனர்.

கே.ஜி.எஃப் 2 தமிழ் புத்தாண்டு அன்று வெளியான நிலையில், இப்படத்தில் நடித்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார் சரண்.

கே.ஜி.எஃப்

கே.ஜி.எஃப்

2022-ம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்று, கே.ஜி.எஃப். 2. ஏனெனில் கே.ஜி.எஃப். படத்தின் முதல் பாகம், மாபெரும் வரவேற்பை பெற்றதுடன், ரசிகர்களிடையே இரண்டாம் பாகம் வெளியீட்டிற்கான ஆர்வத்தை தூண்டும் வகையில், பிரம்மாண்ட காட்சிகள் மற்றும் கதைக்களம் அமைக்கப்பட்டு இருந்தது.

அமோக வரவேற்பு

அமோக வரவேற்பு

இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த 14-ம் தேதி உலகம் முழுவதும், கே.ஜி.எஃப். 2 திரைப்படம் வெளியானது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியான இந்தப் படம், எதிர்பார்ப்புகளையும் மீறி வசூலிலும், விமர்சன ரீதியாகவும், அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

வடசென்னையால் கிடைத்த வாய்ப்பு

வடசென்னையால் கிடைத்த வாய்ப்பு

கேஜிஎஃப் சேப்டர்2 திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த சரண் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், வடசென்னை படத்தை பார்த்துவிட்டுத்தான் இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்தது. ஷூட்டிங்கின் போது மிகவும் ஜாலியாக, கிரிக்கெட் விளையாட்டுக்கொண்டு இருந்தோம்.

வியந்து போனேன்

வியந்து போனேன்

கேஜிஎஃப் செட்டை பார்க்கவே ரொம் பிரம்மாண்டமாகவும் பயமாகவும் இருந்தது. ஆனால்,இயக்குநர் மற்றும் யாஷ் அந்த பயத்தை போக்கினார்கள். ஷூட்டிங்கின் போது யாஷ் சார், என் குடும்பத்தை பற்றி கேட்டார். அவர் அப்பா பற்றி, இன்னும் நிறைய விஷயங்களை பேசுவார். யாஷ் இப்படி இருப்பாருன்னு நினைக்கவே இல்லை. உலகமே வியந்து பார்க்கும் இடத்திற்கு போனாலும் இன்னும் அதே அடக்கத்துடனேயே இருக்கிறார். நானே சின்ன பையன் தான். என் வாழ்க்கையில் இதுநாள் வரை இதுபோன்ற ஒரு அடக்கமான மனிதரை பார்த்தது இல்லை என்றார் சரண்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X