'கேஜிஎப் சாப்டர் 2' படத்தின் நூறு நாள் ஷூட்டிங் முடிந்தது... ரிலீஸ் அந்த மாதத்தில் இல்லையாமே?

By

சென்னை: 'கேஜிஎப் சாப்டர் 2' படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதை அடுத்து போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் தொடங்கியுள்ளன.

Recommended Video

KGF Chapter 2 First Look | Trailer Update | Yash | Sanjay Dutt | Prashanth Neel

கன்னட ஹீரோ யஷ் நடித்த 'கே.ஜி.எப்' படம் கன்னடம் தவிர தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு மொழிகளில் கடந்த 2018 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது.

பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்தப் படம், சூப்பர் ஹிட்டானது. படம் மொத்தம் ரூ.250 கோடி வசூலித்து சாதனைப் படைத்தது.

அதிக பட்ஜெட்

அதிக பட்ஜெட்

இந்தப் படத்தை நடிகர் விஷால், தமிழில் வெளியிட்டார். இதையடுத்து இதன் இரண்டாம் பாகம் இன்னும் அதிக பட்ஜெட்டில், கேஜிஎப் சாப்டர் 2 என்ற பெயரில் உருவாகி வருகிறது. முதல் பாகத்தை இயக்கிய பிரசாந்த் நீல், இதையும் இயக்குகிறார். முதல் பாகத்தில் நடித்த ஶ்ரீனிதி ஷெட்டி ஹீரோயினாக நடிக்கிறார். ஆனந்த் நாக், மாளவிகா அவினாஷ் உட்பட பலர் நடிக்கின்றனர்.

சஞ்சய் தத்

சஞ்சய் தத்

பிரபல இந்தி நடிகர் சஞ்சய் தத், ஆக்ரோஷ வில்லனாக அதீரா என்ற கேரக்டரில் நடிக்கிறார். முதல் பாகத்தை தமிழில் வெளியிட்ட விஷால், இரண்டாம் பாகத்தையும் வெளியிடுகிறார். முதல் பாகம் ஹிட்டானதால், இரண்டாம் பாகத்துக்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதை அதிகரிக்கும் வகையில், இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் இரண்டாம் லுக் போஸ்டரும் அமைந்துள்ளதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

ரவீணா டாண்டன்

ரவீணா டாண்டன்

இந்தப் படத்தின் ஷூட்டிங்கில் நடிகை ரவீணா டாண்டன் சமீபத்தில் இணைந்தார். அவர், பிரதமராக நடிப்பதாகக் கூறப்படுகிறது. அவர் நடிக்கும் காட்சிகள் மைசூரில் படமாக்கப்பட்டன. இந்தக் கேரக்டரில் நடிக்க முதலில், ரம்யா கிருஷ்ணனிடம்தான் கேட்டதாகவும் அவர் அதிக சம்பளம் கேட்டதால் நடிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

போஸ்ட் புரொடக்‌ஷன்

போஸ்ட் புரொடக்‌ஷன்

கடைசிக்கட்டப் படப்பிடிப்பு ராமோஜிராவ் பிலிம்சிட்டியில் நடந்துள்ளது. சுமார் 100 நாட்கள் நடந்த படப்பிடிப்பு முடிந்துவிட்டது என்றும் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் தொடங்கிவிட்டதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது. படத்தின் டீசர் விரைவில் வெளியாக இருக்கிறது. படம் ஜூலை மாதம் 5 மொழிகளில் ரிலீஸ் ஆகும் என்று முதலில் கூறப்பட்டது. இப்போது இந்த வருட இறுதியில் படம் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X