தமிழ் படத்தை விடுங்க.. இந்தி பட நிலைமை இப்படி ஆகிடுச்சே.. பாலிவுட்டிலும் ராக்கி பாய் ராஜ்ஜியம் தான்!

மும்பை: ராக்கி பாய் வராருன்னு முன்பே பயந்து பாலிவுட்டில் நடிகர் ஷாகித் கபூரின் ஜெர்ஸி படத்தின் ரிலீஸை ஒரு வாரத்திற்கு தள்ளி வைத்தனர்.

கடந்த 10 நாட்களாக கேஜிஎஃப் 2 சுனாமி உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமையான நேற்று வெளியான ஷாகித் கபூர் படத்துக்கு வந்துள்ள வசூலை பார்த்து பாலிவுட் சமஸ்தானமே ஆட்டம் கண்டு போயிருக்கிறதாம்.

ரீமேக்வுட்

ரீமேக்வுட்

ஒரு காலத்தில் அமிதாப் பச்சன் நடித்த பாலிவுட் படங்களை தமிழில் ரஜினிகாந்த்தும் தெலுங்கு, கன்னட மொழிகளில் மற்ற நடிகர்களும் நடித்து ஹிட் கொடுத்தனர். ஆனால், பாலிவுட்டில் திரைக்கதைக்கு தற்போது பெரியளவில் பஞ்சம் ஏற்பட்டுள்ள நிலையில், வரிசையாக தென்னிந்திய படங்களை ரீமேக் செய்து நடித்து வருகின்றனர். விக்ரம் வேதா, ஜிகர்தண்டா, ஜெர்ஸி என பல படங்கள் லைன் அப்பில் உள்ளன.

ஜெர்ஸி ரீமேக்

ஜெர்ஸி ரீமேக்

தெலுங்கில் நடிகர் நானி நடிப்பில் வெளியாகி தேசிய விருது பெற்ற ஜெர்ஸி திரைப்படத்தை பாலிவுட்டில் நடிகர் ஷாகித் கபூர் ரீமேக் செய்து நடித்திருந்தார். நேற்று வெளியான இந்த படத்திற்கு விமர்சன ரீதியாக நல்ல பாசிட்டிவ் ஆன ஸ்கோர் வந்தபோதிலும் வசூல் ரீதியாக பலத்த அடி வாங்கி உள்ளது பாலிவுட் திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

பயந்து ஓடி

பயந்து ஓடி

கடந்த வாரமே ஜெர்ஸி திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் கேஜிஎஃப் 2 படத்தின் ப்ரீ ரிலீஸ் பிசினஸ் ரிப்போர்ட்டை இந்தி மார்க்கெட்டில் பார்த்த மாத்திரத்திலேயே படத்தை ஒரு வாரம் தள்ளி ரிலீஸ் செய்யலாம் என்கிற முடிவை படக்குழு எடுத்து விட்டனர். அந்த முடிவை இன்னும் ஒரு வார காலத்திற்கு தள்ளி வைத்திருக்கலாமோ என தற்போது யோசித்து வருகின்றனர்.

முதல் நாள் வசூல்

முதல் நாள் வசூல்

ஷாகித் கபூர் இதற்கு முன்னதாக அர்ஜுன் ரெட்டி படத்தை ரீமேக் செய்து தெலுங்கை விட இந்தியில் 400 கோடி ரூபாய் வசூலை வாரிக் குவித்து இருந்தார். இந்நிலையில், ஜெர்ஸி படம் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல் நாளில் வெறும் 4 கோடி ரூபாய் தான் வசூல் வந்துள்ளதாக வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட் பாலிவுட் பிரபலங்களை நடுக்கத்தில் ஆழ்த்தி உள்ளது.

ராக்கி பாய் ரூலிங் பாலிவுட்

ராக்கி பாய் ரூலிங் பாலிவுட்

ஆர்ஆர்ஆர் படத்தைத் தொடர்ந்து கேஜிஎஃப் 2 திரைப்படம் தான் பாலிவுட்டிலும் மிகப்பெரிய வசூல் வேட்டையை படைத்து வருகிறது. கேஜிஎஃப் 2 படத்தை வெளியிட்டுள்ள தியேட்டர்கள் எதுவும் ஜெர்ஸி படத்துக்கு காட்சிகளை ஒதுக்கவே யோசித்து வருகின்றன. மேலும், கேஜிஎஃப் 2 படத்திற்கான காட்சிகள் தான் அதிகரித்து வருவதால் தான் இப்படியொரு வசூல் இழப்பை முதல் நாளிலேயே ஜெர்ஸி படம் அடைந்துள்ளதாக கூறுகின்றனர். 300 கோடி ரூபாய் வசூலை இந்தி பெல்ட்டில் மட்டும் கேஜிஎஃப் 2 பெற்றுள்ளதாம். இந்த வார இறுதி நாட்களில் மேலும், வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆமீர்கான் படம் வந்தால் தான்

ஆமீர்கான் படம் வந்தால் தான்

பாலிவுட்டை மீண்டும் பழைய நிலைமைக்கு கொண்டு வர ஆமீர்கானின் லால் சிங் சத்தா படம் வந்தால் தான் உண்டு என பாலிவுட் வட்டாரங்கள் பரவலாக பேசி வருகின்றன. பாகுபலி 2 படம் 1800 கோடி வசூல் செய்த போது ஆமிர்கானின் Dangal திரைப்படம் 2000 கோடியை வசூலித்து பாலிவுட் திரையுலகை தலைநிமிரச் செய்தது குறிப்பிடத்தக்கது.

பின்னுக்குத் தள்ளப்பட்ட பீஸ்ட்

பின்னுக்குத் தள்ளப்பட்ட பீஸ்ட்

தமிழ்நாட்டில் வெறும் 250 தியேட்டர்களில் ரிலீசான கேஜிஎஃப் 2 திரைப்படம் தற்போது 400 தியேட்டர்களை கைப்பற்றி வசூல் வேட்டை ஆடி வருகிறது. விஜய்யின் பீஸ்ட் படத்திற்கு தியேட்டர்களும், காட்சிகளும் குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அடுத்த வாரம் விஜய்சேதுபதி, சமந்தா, நயன்தாரா நடித்துள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்திற்கு போதுமான தியேட்டர்கள் கிடைக்குமா? ராக்கி பாயின் வசூல் வேட்டை குறையுமா என்பதை வெயிட் பண்ணிப் பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X