8ந் தேதி ரிலீஸாகிறது கே.ஜி.எப்2 டீசர்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
சென்னை: யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத் ஆகியோர் நடிப்பில் கே.ஜி.எப் 2ம் பாகம் வெளியாக உள்ளது.
இந்த படத்தின் முதல் பாகம் 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் டீசர் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

ரசிகர்கள் வரவேற்பு
இந்த படத்தில் அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த கதாபாத்திரம் 'அதிரா'. அந்த கதாபாத்திரத்தை பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிப்பதாக படக்குழு அறிவித்து வேற லெவலில் போஸ்டர் வெளியிட அதனை ரசிகர்கள் பெரிதும் வரவேற்று கொண்டாடினர்.

ஏமாற்றிய கொரோனா
கே.ஜி.எப் முதல் பாகம் இந்திய அளவில் பெரிய ஹிட் அடித்தது
முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் சண்டை காட்சிகள் சிறப்பாக இருக்கும் என வெளிவந்த அறிவிப்புகளை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களை கொரோனா ஏமாற்றியது.

வேற லெவல் ப்ரோமோஷன்
டீசர் வெளியாவதையொட்டி கே.ஜி.எப் படக்குழு கே.ஜி.எப் டைம்ஸ் எனும் செய்தித்தாள் போன்ற புகைப்படம் ஒன்றில் "ஹீரோவா இல்ல வில்லனா?", "ராக்கி தேர்ந்தெடுப்பது காதலா ஆளுமையா?" என வசங்களுடன் வேற லெவலில் ப்ரோமோஷன் செய்து வருகின்றனர்.

ரசிகர்களுக்கு விருந்து
கடந்த வருடம் வெளியாகி இருக்க வேண்டிய இந்த படத்திற்கு இந்த வருடம் ஜனவரி 8ம் தேதி தான் டீசர் வெளியிடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஜனவரி 8ம் தேதி யாஷின் பிறந்தநாளையொட்டி ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் டீசர் வெளிவர உள்ளது


Click it and Unblock the Notifications











