விஜய் படத்தை முந்திடுச்சாமே.தொடர்ந்து சாதனை படைக்கும் ராக்கிங் ஸ்டாரின்'கே.ஜி.எஃப்:சாப்டர் 2' டீசர்!

By

சென்னை: 'கே.ஜி.எஃப்: சாப்டர் 2' படத்தின் டீசர், யூடியூப்பில் 90 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.

கன்னடத்தில் உருவான, 'கே.ஜி.எஃப்' படம் தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு மொழிகளில் கடந்த 2018 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது.

அனைத்து மொழிகளிலும் இந்தப் படம் வரவேற்பை பெற்றதை அடுத்து, இதன் இரண்டாம் பாகம், உருவாகி வருகிறது.

ஶ்ரீனிதி ஷெட்டி

ஶ்ரீனிதி ஷெட்டி

முதல் பாகத்தை இயக்கிய பிரசாந்த் நீல், 'கே.ஜி.எஃப்: சாப்டர் 2 என்ற இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார். முதல் பாகத்தில் நடித்த ஶ்ரீனிதி ஷெட்டி ஹீரோயினாக நடிக்கிறார். ரவீனா டாண்டன், ஆனந்த் நாக், மாளவிகா அவினாஷ் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தி நடிகர் சஞ்சய் தத், அதீரா என்ற கேரக்டரில் வில்லனாக நடிக்கிறார்.

 சஞ்சய் தத் பங்கேற்பு

சஞ்சய் தத் பங்கேற்பு

முதல் பாகம் ஹிட்டானதால், இரண்டாம் பாகத்துக்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில், புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்றுவந்த சஞ்சய் தத், இதன் ஷூட்டிங்கில் பங்கேற்பாரா என்ற சந்தேகம் எழுந்தது. இந்நிலையில் அதில் இருந்து முழுவதும் குணமடைந்து இதன் ஷூட்டிங்கில் பங்கேற்றார்

 சில காட்சிகள்

சில காட்சிகள்

கொரோனா காரணமாக திட்டமிட்டபடி படத்தை முடிக்கவில்லை. கொரோனா தளர்வுகளுக்குப் பிறகு இதன் ஷூட்டிங், கடந்த அக்டோபர் மாதம் மங்களூரில் மீண்டும் தொடங்கியது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடக்கிறது. இதற்கிடையே, இந்த படத்தின் டீசர், ஹீரோ யஷ் பிறந்த நாளான ஜனவரி 8 ஆம் தேதி வெளியானது.

 ராக்கிங் ஸ்டார் டீசர்

ராக்கிங் ஸ்டார் டீசர்

இந்த டீசர், பல சாதனைகளை படைத்துள்ளது. வெளியான 76 நிமிடங்களில், ஒரு மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்தது. ராக்கிங் ஸ்டார் யஷின் இந்த டீசர், விஜய், ஜூனியர் என்டிஆர் ஆகியோர் படங்களின் டீசரை விட, அதிக பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளதாக ரசிகர்கள் தெரிவித்தனர்.

 78 மில்லியன்

78 மில்லியன்

விஜய்யின் மாஸ்டர் டீசர், 78 நிமிடங்களில்தான் ஒரு மில்லியன் பார்வைகளை கடந்தது என்று அவர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் கே.ஜி.எஃப்: சாப்டர் 2 டீசர், வெளியான 24 மணி நேரத்தில், 78 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்தது. இதையடுத்து ரசிகர்களின் அன்புக்கு நன்றி என்று படக்குழு கூறியுள்ளது. இந்நிலையில் இப்போது இந்த டீசர் 90 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X