'கே.ஜி.எஃப்: சாப்டர் 2' படத்தின் டீசர் எப்போது? தயாரிப்பாளர் சர்பிரைஸ் தகவல்.. ரசிகர்கள் மகிழ்ச்சி!

By

சென்னை: கே.ஜி.எஃப்: சாப்டர் 2 படத்தின் டீசர், ஹீரோ யஷ் பிறந்த நாள் அன்று வெளியிடப்படும் என்று படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Recommended Video

KGF Amma Archana Ultra model Picture • KGF 2 • Yash

கன்னடத்தில் உருவான 'கே.ஜி.எஃப்' படம் தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு மொழிகளில் கடந்த 2018 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது.

அனைத்து மொழிகளிலும் இந்தப் படம் வரவேற்பை பெற்றதை அடுத்து, இதன் இரண்டாம் பாகம், உருவாகி வருகிறது.

நடிகர் சஞ்சய் தத்

நடிகர் சஞ்சய் தத்

முதல் பாகத்தை இயக்கிய பிரசாந்த் நீல், 'கே.ஜி.எஃப்: சாப்டர் 2 என்ற இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார். முதல் பாகத்தில் நடித்த ஶ்ரீனிதி ஷெட்டி ஹீரோயினாக நடிக்கிறார். ஆனந்த் நாக், மாளவிகா அவினாஷ் உள்பட பலர் நடிக்கின்றனர். இந்தி நடிகர் சஞ்சய் தத், அதீரா என்ற கேரக்டரில் வில்லனாக நடிக்கிறார்.

எதிர்பார்ப்பு அதிகரிப்பு

எதிர்பார்ப்பு அதிகரிப்பு

முதல் பாகம் ஹிட்டானதால், இரண்டாம் பாகத்துக்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில், புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்றுவந்த சஞ்சய் தத் இதன் ஷூட்டிங்கில் பங்கேற்பாரா என்ற சந்தேகம் எழுந்தது. இந்நிலையில் அதில் இருந்து முழுவதும் குணமடைந்துவிட்டார். இதன் ஷூட்டிங்கில் இந்த மாதம் கலந்துகொள்கிறார்.

சில காட்சிகள்

சில காட்சிகள்

கொரோனா காரணமாக திட்டமிட்டபடி படத்தை முடிக்கவில்லை. 'பெரும்பாலான காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டாலும் சில காட்சிகள் மட்டுமே பாக்கி இருக்கிறது. அதில் முக்கியமானது சண்டைக் காட்சி. அனுமதி கிடைத்ததும் ஷூட்டிங் தொடங்கும் என்று படக்குழு சார்பில் ஏற்கெனவே கூறப்பட்டு இருந்தது.

மீண்டும் ஷூட்டிங்

மீண்டும் ஷூட்டிங்

அதன்படி கடந்த மாதம் மங்களூரில் இதன் ஷூட்டிங் மீண்டும் தொடங்கியது. 8 மாதத்துக்கு பிறகு இந்த படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொள்கிறார் படத்தின் ஹீரோயின் ஶ்ரீனிதி ஷெட்டி. இயக்குனர் பிரஷாந்த் நீலுடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் புகைப் படத்தையும் அவர் வெளியிட்டார்.

கார்த்திக் கவுடா

கார்த்திக் கவுடா

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் ஐதராபாத்தில் நடக்கிறது. இதற்கிடையே, இந்த படத்தின் டீசர், ஹீரோ யஷ் பிறந்த நாளான ஜனவரி 8 ஆம் தேதி வெளியிடப்படும் என்று படத்தின் தயாரிப்பாளர் கார்த்திக் கவுடா கூறியுள்ளார். ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த கார்த்திக் கவுடா, இதை தெரிவித்துள்ளார். அந்த டீசர் வேற லெவலில் இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X