இன்னும் இவ்ளோ நாள் பாக்கி.. வரும் 15-ல் மீண்டும் தொடங்குகிறது கே.ஜி.எப் சாப்டர் 2 ஷூட்டிங்!
சென்னை: கே.ஜி.எப் சாப்டர் 2 படத்தின் ஷூட்டிங் வரும் 15 ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்க இருக்கிறது.
Recommended Video
'கே.ஜி.எப்' படம் கன்னடம் தவிர தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு மொழிகளில் கடந்த 2018 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது.
இந்தப் படம் சூப்பர் ஹிட்டானதை அடுத்து இதன் இரண்டாம் பாகம், கேஜிஎப் சாப்டர் 2 என்ற பெயரில் உருவாகி வருகிறது.

நடிகர் சஞ்சய் தத்
முதல் பாகத்தை இயக்கிய பிரசாந்த் நீல், இதையும் இயக்குகிறார். முதல் பாகத்தில் நடித்த ஶ்ரீனிதி ஷெட்டி இதிலும் ஹீரோயினாக நடிக்கிறார். ஆனந்த் நாக், மாளவிகா அவினாஷ் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தி நடிகர் சஞ்சய் தத், அதீரா என்ற கேரக்டரில் வில்லனாக நடிக்கிறார். முதல் பாகம் ஹிட்டானதால், இரண்டாம் பாகத்துக்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

டிஜிட்டல் ரைட்ஸ்
இந்தப் படத்தில் ரவீணா டாண்டன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். படத்தை அக்டோபர் மாதம் வெளியிட படக்குழுத் திட்டமிட்டது. இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் சமீபத்தில் தொடங்கின. இதை படத்தின் தயாரிப்பாளர்களுள் ஒருவரான கார்த்திக் கவுடா தெரிவித்திருந்தார். இந்தப் படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ், ரூ.55 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

வரவேற்பு கிடைத்தது
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாள மொழிகளுக்கும் சேர்த்து, அமேசான் நிறுவனம் இந்த தொகைக்கு வாங்கியதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இந்தப் படத்தில் அதீரா என்ற கேரக்டரில் நடிக்கும் நடிகர் சஞ்சய் தத்தின் லுக் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது.

லாக்டவுன் காரணமாக
இன்னும் 15 நாள் படப்பிடிப்பு மட்டுமே பாக்கி இருக்கிறது. லாக்டவுன் காரணமாக தடைபட்டிருந்த படப்பிடிப்பை குறைவான நபர்களைக் கொண்டு நடத்திக் கொள்ள சில மாநிலங்கள் அறிவித்துள்ளன. இதனால் கே.ஜி.எஃப் சாப்டர் 2 படத்தின் ஷூட்டிங் இந்த மாதம் 15 ஆம் தேதி தொடங்குகிறது. கொரோனாவுக்காக கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை பின்பற்றி இந்த படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.


Click it and Unblock the Notifications











