World is My Territory… ஒரே ஒரு டயலாக்… ரசிகர்களை கவுத்த யாஷ்…

சென்னை : ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் கேஜிஎஃப் 2 திரைப்படம் ஏப்ரல் 14 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது.

இந்தப் படத்தின், டிரெய்லர் தமிழ், தெலுங்கு, இந்தி,கன்னடம் என 4 மொழிகளில் இன்று வெளியானது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய யாஷ், ஒரே ஒரு டயலாக்கை சொல்லி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவுத்துவிட்டார்.

கேஜிஎஃப் சாப்டர் 2

கேஜிஎஃப் சாப்டர் 2

கேஜிஎஃப் சாப்டர் 2 திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா, பெங்களுரில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய யாஷ், பொதுவாக நான் எதற்கும் பதற்றப்படமாட்டேன், ஆனால் முதல் முறையாக பதற்றமாக இருக்கு, இதை பதற்றம் என்று சொல்ல முடியாது. ஆனால் இது ஒரு புதுவிதமான உணர்வாக இருக்கிறது என்றார்.

மனதில் பல நினைவுகள்

மனதில் பல நினைவுகள்

இந்த மகிழ்ச்சியான நேரத்தில் புனித் ராஜ்குமார் சார் இல்லை என்பதை நினைத்து வருத்தப்படுகிறேன். ஹோம்பல் பிலிம் தொடங்குவதற்கு முக்கிய காரணமே புனித் ராஜ்குமார் தான். அவர், தற்போது இல்லை என்றாலும் அவர் குறித்த பல நினைவுகளை நம் மனதில் விதைத்துள்ளார். நிச்சயம் அவரது ஆன்மா நம்மைச்சுற்றியே இருக்கும் என்றார்.

கேஜிஎஃப் 2 திரைப்படத்தின் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் இந்த நேரத்தில் நன்றி சொல்ல நான் கடமைப்பட்டு இருக்கிறார். இவர் எங்களின் கனவை தற்போது நிறைவேற்றி இருக்கிறார் என்றார். தொடர்ந்து பேசிய யாஷ்,கேஜிஎஃப் இன்று உலகத்தையே திரும்பி பார்க்க வைத்துள்ளது என்றால், அந்த அனைத்து புகழுக்கும் காரணம் ஒரே ஒருவர் தான் அவர் தான் இயக்குர் பிரசாந் நீல் என்று புகழ்ந்தார்.

ஆதரவுக்கு நன்றி

ஆதரவுக்கு நன்றி

நான் எந்த ஊடகத்திற்கும் பேட்டி கொடுத்தது இல்லை, இருந்தாலும் பத்திரிக்கையாளர்கள் என்னை ஆதரித்து இருக்கிறார்கள். கேஜிஎஃப் 1க்கு மிகப்பெரிய ஆதரவு அளித்தீர்கள் அது சாப்டர் 2க்கும் தொடர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். உங்களின் ஆதரவுக்கு நன்றி என்றார்.

மாஸ் டயலாக்

மாஸ் டயலாக்

என் மீது அதீத அன்புவைத்த ரசிகர்களுக்கு நன்றி நீங்கள் இல்லாமல் நான் இல்லை, நீங்கள் தான் என்னை வாழவைத்துக்கொண்டு இருக்கிறீர்கள் என்றார். பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என்ற பேதம் இல்லாமல் இந்திய சினிமாவாக மாற்றுவோம் என்றார். இறுதியாக world is my territory என்ற மாஸான வசனத்துடன் தனது பேச்சை முடித்தார். யாஷ் பேசியக அந்த டயலாக்கை தற்போது அவரது ரசிகர்கள்ட்விட்டரில் தெறிக்கவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X