twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எனக்கு Vilolance பிடிக்காது...ஆனா அதுக்கு என்னை பிடிக்கும்...மிரட்டலாக வெளியானது கேஜிஎஃப் 2 டிரைலர்

    |

    சென்னை : ராக் ஸ்டார் யாஷ் நடித்துள்ள கேஜிஎஃப் 2 படத்தின் டிரைலர் மிரட்டலான இசை, மாஸ் டயலாக்குடன் வெளியாகி உள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 4 மொழிகளில் இந்த டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது.

    ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள படம் 'கே ஜி எஃப் சாப்டர் 2'. இந்த படத்தின் முதல் பாகம் 2018 ம் ஆண்டு வெளியாகி, 250 கோடி வசூலித்து இந்திய அளவில் சாதனை படைத்தது. இதனையடுத்து 'கே ஜி எஃப் 2'படம், வரும் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இப்படத்தை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார்.

    இனி திரும்பி வர மாட்டேன்... ஆலியா மானசாவின் போஸ்டால் மனம் நொருங்கிய ரசிகர்கள் இனி திரும்பி வர மாட்டேன்... ஆலியா மானசாவின் போஸ்டால் மனம் நொருங்கிய ரசிகர்கள்

    ஏப்ரல் 14ல் கேஜிஎஃப் சாப்டர் 2

    ஏப்ரல் 14ல் கேஜிஎஃப் சாப்டர் 2

    இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் தயாராகி உள்ள 'கே ஜி எஃப் சாப்டர் 2' படத்தில் ராக் ஸ்டார் யஷ் லீட் ரோலில் நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருக்கிறார். இவர்களுடன் பாலிவுட் நடிகர் சஞ்சய்தத், ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், அச்சுத் குமார், ராவ் ரமேஷ், ஈஸ்வரி ராவ், ராமச்சந்திர ராஜு, ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ரவி பர்சூர் இசை அமைத்திருக்கிறார்.

    சாதனை படைத்த கேஜிஎஃப் 2 டீசர்

    சாதனை படைத்த கேஜிஎஃப் 2 டீசர்

    இப்படத்தின் டீஸர் வெளியாகி 240 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்று யூட்யூப்பில் சாதனை படைத்துள்ளது . சமீபத்தில் வெளியான இப்படத்தின் பாடலும் மில்லியன் கணக்கிலான பார்வைகளைப் பெற்று சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில் ஆக்சன் ரசிகர்களுக்கிடையே பேரார்வத்தை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தின் டிரைலர் பெரும் எதிர்பார்ப்பிற்கிடையே இன்று மாலை வெளியானது.

    தமிழில் வெளியிடும் மாஸ் ஹீரோ

    தமிழில் வெளியிடும் மாஸ் ஹீரோ

    தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் கேஜிஎஃப் 2 படத்தின் டிரைலர் ரிலீஸ் செய்யப்பட்டது. இதன் தமிழ் வெர்சனை தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோக்களில் ஒருவரான சூர்யா வெளிட்டுள்ளார். மிரட்டலான இசை, அசத்தலான மாஸ் பஞ்ச் டயலாக்குடன் வெளியாகி உள்ள இந்த டிரைலர் 7 நிமிடங்களில் 80,000 பார்வைகளையும், 26,000 லைக்குகளையும் பெற்றுள்ளது.

    எனக்கு வயலன்ஸ் பிடிக்காது

    எனக்கு வயலன்ஸ் பிடிக்காது

    எனக்கு வயலன்ஸ் பிடிக்காது. அதனால அதை நான் அவாய்ட் பண்ண நினைக்கிறேன். ஆனால் வயலன்சிற்கு என்னை பிடித்திருக்கிறது. அதனால் அதை என்னால் அவாய்ட் பண்ண முடியல என யாஷ் பேசும் டயலாக்கை அதிகமானவர்கள் சோஷியல் மீடியாவில் பகிர்ந்து லைக்குகளை குவித்து வருகின்றனர்.

    ஏப்ரல் 14 தியேட்டர் ரிலீஸ்

    ஏப்ரல் 14 தியேட்டர் ரிலீஸ்

    100 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ள கேஜிஎஃப் 2 படம் தெலுங்கு, இந்தி, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் ஏப்ரல் 14 ம் தேதி ரிலீசாக உள்ளது. கொரோனா, லாக்டவுன், கோர்ட் தடை என பல தடைகளை தாண்டி வெற்றிகரமாக இந்த படம் ரிலீசாக உள்ளதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    எப்போ ஓடிடி ரிலீஸ்

    எப்போ ஓடிடி ரிலீஸ்

    கேஜிஎஃப் 2 படத்தின் தென்னிந்திய சேட்டிலைட் உரிமத்தை ஜீ நெட்வொர்க்கும். வட இந்திய சேட்டிலைட் உரிமத்தை சோனி நெட்வொர்க்கும் பெற்றுள்ளன. இந்த படத்தின் டிஜிட்டல் வெளியீட்டு உரிமத்தை அமேசான் பிரைம் வீடியோ பெற்றள்ளது. தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட்ட பிறகு ஓடிடி ரிலீஸ் தேதியை அமேசான் அறிவிக்க உள்ளது.

    English summary
    Yash starred KGF chapter 2 trailer released today in 4 languages. Tamil version of this trailer was launched by Suriya. This movie was planned to release on April 14 due to an occassion of Sankaranthi. Amazon prime video buy a digital streaming rights of KGF chapter 2. After theatrical release, it will released in ott.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X