கேஜிஎஃப் 2 டிரைலர் இன்று ரிலீஸ்...தமிழ் வெர்சனை வெளியிடும் மாஸ் ஹீரோ
சென்னை : ராக் ஸ்டார் யாஷ் நடித்துள்ள கேஜிஎஃப் 2 படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியாக உள்ளது. இதன் தமிழ் வெர்சனை தமிழ் சினிமாவை சேர்ந்த மாஸ் ஹீரோ ஒருவர் டிஜிட்டலில் வெளியிட போகிறாராம்.
ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள படம் 'கே ஜி எஃப் சாப்டர் 2'. இந்த படத்தின் முதல் பாகம் 2018 ம் ஆண்டு வெளியாகி, 250 கோடி வசூலித்து இந்திய அளவில் சாதனை படைத்தது. இதனையடுத்து 'கே ஜி எஃப் 2'படம், வரும் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இப்படத்தை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார்.

ஏப்ரல் 14ல் கேஜிஎஃப் சாப்டர் 2
இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் தயாராகி உள்ள 'கே ஜி எஃப் சாப்டர் 2' படத்தில் ராக் ஸ்டார் யஷ் லீட் ரோலில் நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருக்கிறார். இவர்களுடன் பாலிவுட் நடிகர் சஞ்சய்தத், ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், அச்சுத் குமார், ராவ் ரமேஷ், ஈஸ்வரி ராவ், ராமச்சந்திர ராஜு, ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ரவி பர்சூர் இசை அமைத்திருக்கிறார்.

சாதனை படைத்த கேஜிஎஃப் 2 டீசர்
இப்படத்தின் டீஸர் வெளியாகி 240 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்று யூட்யூப்பில் சாதனை படைத்துள்ளது . சமீபத்தில் வெளியான இப்படத்தின் பாடலும் மில்லியன் கணக்கிலான பார்வைகளைப் பெற்று சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில் ஆக்சன் ரசிகர்களுக்கிடையே பேரார்வத்தை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தின் டிரைலர் பெரும் எதிர்பார்ப்பிற்கிடையே இன்று மாலை 6.40 மணிக்கு வெளியாகிறது.

தமிழில் வெளியிடும் மாஸ் ஹீரோ
தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் கேஜிஎஃப் 2 படத்தின் டிரைலர் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இதன் தமிழ் வெர்சனை தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோக்களில் ஒருவரான சூர்யா வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சூரரைப் போற்று, ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன் என அடுத்தடுத்து மாஸ் ஹிட் கொடுத்து வரும் சூர்யாவின் ஒவ்வொரு செயலும் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தி வருகின்றன.

ஏப்ரல் 14 தியேட்டர் ரிலீஸ்
100 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ள கேஜிஎஃப் 2 படம் தெலுங்கு, இந்தி, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் ஏப்ரல் 14 ம் தேதி ரிலீசாக உள்ளது. கொரோனா, லாக்டவுன், கோர்ட் தடை என பல தடைகளை தாண்டி வெற்றிகரமாக இந்த படம் ரிலீசாக உள்ளதை ராசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

எப்போ ஓடிடி ரிலீஸ்
கேஜிஎஃப் 2 படத்தின் தென்னிந்திய சேட்டிலைட் உரிமத்தை ஜீ நெட்வொர்க்கும். வட இந்திய சேட்டிலைட் உரிமத்தை சோனி நெட்வொர்க்கும் பெற்றுள்ளன. இந்த படத்தின் டிஜிட்டல் வெளியீட்டு உரிமத்தை அமேசான் பிரைம் வீடியோ பெற்றுள்ளது. தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட்ட பிறகு ஓடிடி ரிலீஸ் தேதியை அமேசான் அறிவிக்க உள்ளது.


Click it and Unblock the Notifications











