KGF2 Twitter Review : கூஸ் பம்ப்ஸ்…ராக்கி பாயின் சிம்ம கர்ஜனை… மிரட்டும் கே.ஜி.எஃப் 2 !

சென்னை : பிரசாந்த் நீல் இயக்கத்தில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் கே.ஜி.எஃப். தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி உள்ளது.

யாஷ் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், ரவீனா டண்டன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கே.ஜி.எஃப் 2 திரைப்படத்தின் ட்விட்டர் விமர்சனத்தை பார்க்கலாம்.

கே.ஜி.எஃப் 2

கே.ஜி.எஃப் 2

கே.ஜி.எஃப் 2 திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் இன்று பிரம்மாண்டமாக வெளியாகி உள்ளது. உலகம் முழுவதும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைகளில் இப்படத்தை வெளியிட்டுள்ளனர். இப்படத்தின் முதல் காட்சியை பார்த்த ரசிகர்கள் படத்தை வெகுவாக புகழ்ந்து வருகின்றனர்.

புல்லரிக்கிறது

புல்லரிக்கிறது

கே.ஜி.எஃப் 2.. என்ன படம்யா... ப்பா... புல்லரிக்கிறது. வலிமையான படங்கள் தான் பாக்ஸ் ஆபிஸை மேலும் வலிமை ஆக்கும் என பதிவிட்டு, படம் முழுக்க வெறித்தனமாக இருப்பதாக நடிகர் யாஷியின் எமோஜி மூலம் குறிப்பிட்டுள்ளார் ஒரு ரசிகர்.

ராக்கி பாய் என்ட்ரி மாஸ்

ராக்கி பாய் என்ட்ரி மாஸ்

ராக்கி பாய் இஸ் பேக் என மேள தாளங்கள் முழங்க ராக்கி பாய் கேஜிஎஃப் கோட்டைக்கு வரும் மாஸான சீனை ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர். இணையத்தை தெறிக்கவிட்டு வருகின்றனர்.

அனல் தெறிக்கும் வசனம்

அனல் தெறிக்கும் வசனம்

பிரசாந்த் நீல் ஒரு அற்புதமான கதைசொல்லி. KGF2 உலகிற்கு நம்மை அழைத்துச் சென்று தெறிக்கவிடுகிறார். பின்னணி ஸ்கோர், அற்புதமாக ஆக்ஷன் காட்சிகள் ஒவ்வொரு காட்சிக்கும் கைதட்டல்களை பெறுகிறது. யாஷ் படம் முழுக்க தெறிக்கவிட்டு மிரட்டி உள்ளார். ஒவ்வொரு கருவியையும் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துகிறார் பிரசாந்த் நீல்.

தமிழ் டப்பிங் சிறப்பு

தமிழ் டப்பிங் சிறப்பு

இரண்டாம் பாக படங்களிலேயே சிறந்த படமாக கேஜிஎஃப் 2 திரைப்படம் வெளியாகி உள்ளது. அதன் தமிழ் டப்பிங் சிறப்பாக உள்ளது. இயக்குநர் பிரசாந்த் நீல், யாஷ், ஸ்ரீனிதி ஷெட்டி மற்றும் பிரகாஷ் ராஜ் என அனைவரும் அசத்தி உள்ளனர். இண்டஸ்ட்ரி ஹிட் என இந்த ரசிகர் பாராட்டி உள்ளார்.

முழு விருந்து

முழு விருந்து

பஹ்ரைனில் KGF Chapter2 படம் பார்த்து முடித்தேன். பிரஷாந்த் நீல் ஒரு அற்புதமான இயக்குநர், வெகுஜன மக்களுக்கும் உலகத்திற்கும் உணர்ச்சி பூர்வமான முழு விருந்து கொடுத்திருக்கிறா. யாஷ் ஒரு சிறந்த நடிகர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். இந்திய திரைப்படங்களில் தரமான படங்களில் இப்படமும் ஒன்று. கிளைமாக்ஸ் முற்றிலும் பிரமிக்க வைக்கிறது மற்றும் அற்புதமாக இருந்தது.

கூஸ் பம்ப்ஸ்

கூஸ் பம்ப்ஸ்

எல் டோராடோ என்னோடது என ராக்கி பாய் சிம்ம கர்ஜனை செய்யும் காட்சிகள் எல்லாம் கூஸ் பம்ப்ஸ் ஓவர்லோடட் என ரசிகர்கள் கேஜிஎஃப் 2 படத்தை கொண்டாடி வருகின்றனர்.

அபரிமிதமான ஆரவாரம்

அபரிமிதமான ஆரவாரம்

KGF2: பிளாக்பஸ்டர் ஹிட்டடித்துள்ளது. அபரிமிதமான ஆரவாரத்தை விட அதிகமாக உள்ளது. பிரஷாந்த் நீல் ஒட்டுமொத்த உலகத்தையும் பிரம்மிப்பில் மூழ்கடித்துள்ளார். ஒரு கிங் சைஸ் என்டர்டெய்னரை வழங்குகிறார். கட்டாயம், அவசியம், பார்க்க வேண்டிய படம் என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X