அமீர் கானின் ‘டங்கல்‘ சாதனையை முறியடிக்குமா ‘கேஜிஎஃப் 2’.. யாஷூக்கு பெருகும் ஆதரவு.. தாறுமாறு வசூல்!
மும்பை : கேஜிஎஃப் சேப்டர் 2 திரைப்படம் அமீரின் 'தாங்கல்' திரைப்படத்தின் வாழ்நாள் சாதனையை முறியடிக்க உள்ளது.
யாஷ் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் சஞ்சய் தத், பிரகாஷ் ராஜ், ரவீனா டண்டன், சரண், ஈஸ்வரி ராவ், மாளவிகா அவினாஷ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர்.
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. உலகமெங்கும் 10 ஆயிரம் திரைகளில் வெளியிடப்பட்ட இப்படம் வசூலையும் வாரிக்குவித்து வருகிறது.

வசூலில் சாதனை
இயக்குநர் பிரசாந்த் நீலின் இயக்கத்தில் 2018ம் ஆண்டு வெளியான கேஜிஎஃப் முதல் பாகம் கன்னடத் திரையுலகின் கவனத்தை ஈர்த்து பாக்ஸ் ஆபிஸில் ரூ. 100 கோடிக்கு மேல் வசூலில் சாதனை படைத்தது. உலக பாக்ஸ் ஆபிஸில் ரூ.200 கோடிக்கு மேல் வசூலான முதல் கன்னடப் படம் என்ற பெருமையையும் பெற்றது.

அரங்கம் அதிரும் வசனம்
முதல் பாகத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட படம் KGF 2. தமிழ் புத்தாண்டு அன்று ஏப்ரல் 14ந் தேதி வெளியானது. யாஷ் நடித்த இத்திரைப்படம் பாலிவுட்டில் ரூ.53.95 கோடி வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸ் ஓப்பனிங்கைப் பெற்றுள்ளது. கே.ஜி.எஃப் 2 படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் அதன் வசனங்கள் என்று சொல்லலாம். அதிலும் ஹிந்தி பதிப்பில் ராக்கி பாய் பேசும் ஒவ்வொரு வசனங்களும் அரங்கம் அதிர வரவேற்பை பெற்று வருகின்றன.

மிரட்டலான வசூல்
கேஜிஎஃப் சேப்டர் 2 வெளியான 6 நாட்களில் ரூ.235 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. இந்தப் படம் நாளுக்கு நாள் பாலிவுட் படங்களில் அதிக வசூல் செய்த அமீர் கான் நடித்த தாங்கல் பட சாதனை முறியடிக்க உள்ளது. நிதேஷ் திவாரி இயக்கிய தாங்கல் திரைப்படம் ரூ 387.38 கோடி வசூலித்தது. KGF 2 இதே வேகத்தில் சென்றால் தாங்கல் சாதனையை முறியடித்துவிடும்.

பாகுபலி 2 ரூ 510.99 கோடி வசூல்
கேஜிஎஃப் 2 திரைப்படம் வரலாற்றில் இதுபோன்ற சாதனையைப் படைத்த இரண்டாவது படம் என்ற பெருமை பெரும். எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கிய பாகுபலி 2 ரூ 510.99 கோடி வசூலித்து முதலிடத்தில் உள்ளது. பாலிவுட்டில் அதிக வசூல் செய்த முதல் இரண்டு படங்களுமே தெலுங்கு மற்றும் கன்னடத் திரையுலகைச் சேர்ந்தவை என்பது கூறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











