‘’கே.ஜி.எஃப் சாப்டர் 2’’… ட்விட்டரில் மாஸ் காட்டும் ராக்கி பாய்... சும்மா கிழி கிழி தான் !

சென்னை : 'கே.ஜி.எஃப் சாப்டர் 2'' தமிழ் புத்தாண்டு அன்று வெளியாக உள்ள நிலையில், யாஷின் ரசிகர்கள் ட்விட்டரை தெறிக்கவிட்டு வருகின்றனர்.

யாஷ், சஞ்சய் தத், ரவீனா, பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி ஷெட்டி, ஈஸ்வரி ராவ், அனன்ட் நாக், மாளவிகா அவினாஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் ரிலீஸ் தேதி பலமுறை அறிவிக்கப்பட்டு தள்ளிவைக்கப்பட்டு வந்த நிலையில், ஒருவழியாக ஏப்ரல் 14ந் தேதி படம் வெளியாக உள்ளது.

கே.ஜி.எஃப்

கே.ஜி.எஃப்

பிரபல இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில், யஷ் நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான படம் கே.ஜி.எஃப் : சாப்டர் 1. இந்தப் படத்திற்கு இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்தது. முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் கே.ஜி.எஃப் : சாப்டர் 2 என்ற பெயரில் தயாராகியுள்ளது.

ஏப்ரல் 14ந் தேதி ரிலீஸ்

ஏப்ரல் 14ந் தேதி ரிலீஸ்

கடந்த ஆண்டு ஜனவரி மாதமே கே.ஜி.எஃப். : சாப்டர் 2 திரைப்படம் ஜுலை 16-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கொரோனா இரண்டாம் அலை தீவிரமானதால், படத்தை திட்டமிட்டப்படி ரிலீஸ் செய்ய முடியாத சூழல் உருவானது . இதையடுத்து,படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரடெக்ஷன் பணிகளும் முடிந்துள்ளதால், கே.ஜி.எஃப். : சாப்டர் 2 படம் ஏப்ரல் மாதம் 14ம் தேதி வெளியாக உள்ளது.

வேறலெவலில்

வேறலெவலில்

இந்தப் படத்தில் யஷ், சஞ்சய் தத், ரவீணா தாண்டன், பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. பான் இந்திய திரைப்படமாக உருவாகி உள்ள இந்த திரைப்படத்தை திரையில் காண உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். முதல் பாகத்தைவிட இரண்டாம் பாகம் வேற லெவலில் இருக்கும் என்பது டிரைலரில் தெளிவாக தெரிகிறது.

மாஸ் காட்டும் ராக்கி பாய்

மாஸ் காட்டும் ராக்கி பாய்

கே.ஜி.எஃப் சாப்டர் 2 திரைப்படம் வெளியாக இன்னும் 4 நாட்களே உள்ளதால் யாஷின் ரசிகர்கள் இணையத்தை தெறிக்கவிட்டு வருகின்றனர். கேஜிஎஃப் சாப்டர் 2 திரைப்படத்தின் சிறப்பு ட்விட்டர் எமோஜி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த கேஜிஎஃப் ராக்கி பாய் எமோஜி ட்விட்டரில் மாஸ் காட்டி வருகிறது. படம் வெளியாகட்டும் சும்மா கிழி கிழி தான் என்று கே.ஜி.எஃப் திருவிழாவை கொண்டாட தயாராக உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X