“கே.ஜி.எஃப் சேப்டர் 3“… முக்கிய தகவலை சொன்ன படக்குழு… குஷியில் ரசிகர்கள் !

சென்னை : கே.ஜி.எஃப் சேப்டர் 3 குறித்த சூப்பரான தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது.

யாஷ் நடித்த கே.ஜி.எஃப் 2 திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் தமிழ் புத்தாண்டு அன்று வெளியாகி பலரின் பாராட்டை பெற்று வருகிறது.

கே.ஜி.எஃப் 2 உலகம் முழுவதும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைகளில் வெளியானது. இப்படத்தை பார்த்த ரசிகர்கள் 'சலாம் ராக்கி பாய்' என கொண்டாடி வருகின்றனர்.

கே.ஜி.எஃப் சாப்டர் 2

கே.ஜி.எஃப் சாப்டர் 2

நடிகர் யாஷ் நடிப்பில், பிரசாந்த் நீல் இயக்கத்தில் கடந்த 2019-ல் வெளியான கே.ஜி.எஃப் படத்தின் முதல்பாகம் இந்திய அளவில் பிரமாண்ட வரவேற்பை பெற்றது. இதன் அடுத்த பாகம், கடந்த 2020ல் வெளியாக வேண்டியிருந்த நிலையில் கொரோனா காரணமாக வெளியீடு தொடர்ந்து ஒத்தி வைக்கப்பட்டு ஏப்ரல் 14ந் தேதி உலகம் முழுவதும் வெளியானது.

அனல் தெறிக்கும் கதை

அனல் தெறிக்கும் கதை

கே.ஜி.எஃப் படத்தின் முதல் பாகத்தில் தங்க சுரங்கத்தை தன் வசம் வைத்திருந்த கருடனை கொலை செய்து கே.ஜி.எஃப்பை யாஷ் கைப்பற்றினார். அதனைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் தொடர்கிறது. கே.ஜி.எஃப் பில் வாழ்ந்து வரும் மக்களுக்கு நல்லது செய்து தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்து வருகிறார் யாஷ். கே.ஜி.எஃப் பை பிடிக்க யாஷ்க்கு முன்னால் ஆசைப்பட்டு வந்தவர்கள், யாஷை கொலை செய்ய திட்டம் போடுகிறார்கள். இறுதியில் கே.ஜி.எஃப்பை யார் கைப்பற்றுகிறார்கள் என்பது தான் கதை.

சலாம் ராக்கி பாய்

சலாம் ராக்கி பாய்

கன்னட சினிமாவின் பிராண்ட அம்பாஸிடராக உருவெடுத்திருக்கிறார் யாஷ். 'சலாம் ராக்கி பாய்' என மற்ற மொழி ரசிகர்களும் அவரை உச்சி முகர்ந்து கொண்டாடி வருகிறார்கள். யாஷ் திரையில் வரும் ஒவ்வொரு காட்சியில் திரையில் ஒரு பிரளையமே ஏற்படுகிறது. நீளமான தாடியும், வாட்டசாட்டமான தேகம் என இளம் ரசிகைகளின் மாஸ் ஹீரோவாக உருவெடுத்துள்ளார் யாஷ்.

பல கோடி வசூல்

பல கோடி வசூல்

கே.ஜி.எஃப் 2 தமிழகத்தில் 350க்கும் மேற்பட்ட அதிகமான திரையரங்குகளில் வெளியாகி சக்கைபோடு போட்டு வருகிறது. கேஜிஎஃப் 2 திரைப்படம் 275 கோடி முதல் 280 கோடி வரை உலகளவில் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், கே.ஜி.எஃப் மூன்றாம் பாகம் இருப்பது போல படத்தை முடித்துள்ளதால், கே.ஜி.எஃப் 3 குறித்த ஆர்வம் ரசிகர்கள் இடையே அதிகரித்துள்ளது.

Recommended Video

KGF 2 First Day Second Show Audience Review | Yash | KGF 2 Public Review | Filmibeat tamil
கே.ஜி.எஃப் சேப்டர் 3

கே.ஜி.எஃப் சேப்டர் 3

இந்நிலையில், கே.ஜி.எஃப் மூன்றாம் பாகத்துக்கான முன் தயாரிப்புப் பணிகள் தொடங்கி விட்டதாக இந்தப் படத்தின் நிர்வாகத் தயாரிப்பாளர் கார்த்திக் கவுடா தெரிவித்துள்ளார். பிரசாந்த் நீல் தற்போது பிரபாஸ், ஸ்ருதிஹாசன் நடிக்கும் சலார் படத்தை இயக்கி வருகிறார், இந்தப் படத்தை முடித்துவிட்டு அவர் கே.ஜி.எஃப் 3 படத்தை இயக்குவார் என்று தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X