கேஜிஎப் 3 வில்லன் யாருன்னு தெரியுமா.. சூப்பர் செலக்ஷனா இருக்கே.. வேற லெவல் அப்டேட்!
பெங்களூரு : கடந்த 3 ஆண்டுகளில் கேஜிஎப் மற்றும் கேஜிஎப் 2 என திரையுலகில் இரண்டு சூறாவளிப்படங்கள் வெளியாகி தற்போது மையம் கடந்துள்ளன.
கடந்த மாத்தில் வெளியாகியுள்ள கேஜிஎப் 2 படம் 1200 கோடி ரூபாய் வசூலை தாண்டியுள்ளது. தொடர்ந்து வசூல்மழையை பொழிந்து வருகிறது.
இந்தப் படத்தை பிரம்மாண்டமாக எடுத்தாலும் பல மடங்கு லாபத்தை படங்கள் தயாரிப்பாளருக்கு கொடுத்துள்ளன.

கேஜிஎப் 2 படம்
நடிகர் யஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், ரவீணா டன்டன் ஆகியோர் மிரட்டலான நடிப்பில் கடந்த மாதம் 14ம் தேதி திரையரங்குகளில் கேஜிஎப் 2 படம் ரிலீசானது. முன்னதாக வெளியான கேஜிஎப் படத்தின் பிரம்மாண்டம் மற்றும் வசூலை தற்போது கேஜிஎப் 2 படம் தாண்டியுள்ளது.

சர்வதேச அளவில் பிரபலம்
இந்த இரண்டு படங்களை இயக்கியதன்மூலமே சர்வதேச அளவில் பிரபலமாகியுள்ளார் இயக்குநர் பிரஷாந்த் நீல். தற்போது பிரபாசின் சலார் படத்தை இயக்கிவரும் இவர், அடுத்ததாக என்டிஆர் 31 படத்தில் ஜூனியர் என்டிஆருடன் இணையவுள்ளார். இந்தப் படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியாகியுள்ளது.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு
கேஜிஎப் 2 படம் கொடுத்த சிறப்பான அனுபவத்தை அடுத்து அடுத்ததாக இந்தப் படத்தின் அடுத்த பாகம் குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பத் துவங்கினர். தயாரிப்பு தரப்பும் படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் துவங்கியுள்ளதாகவும் இந்த ஆண்டின் இறுதியில் படப்பிடிப்பு துவங்கவுள்ளதாகவும் தெரிவித்தது.

கேஜிஎப் 3 வில்லன்?
ஆனால் தற்போது சலார் படத்தை இயக்கிவரும் பிரஷாந்த் நீல், அடுத்ததாக என்டிஆர் நடிப்பில் படத்தை இயக்கவுள்ளதால் கேஜிஎப் 3 படத்தின் சூட்டிங் குறித்து எந்த அப்டேட்டும் இல்லாமல் உள்ளது. இந்நிலையில் தற்போது படத்தின் வில்லன் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் வில்லனாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

மிரட்டிய சஞ்சய் தத்
பாலிவுட்டின் சிறப்பான நாயகனாக இருந்துவரும் ஹ்ரித்திக் ரோஷன் இந்தப் படத்தில் வில்லனாக நடித்தால் அது அவரது ரசிகர்களுக்கும் சிறப்பான விருந்தாக அமையும். முன்னதாக கேஜிஎப் 2 படத்தில் சஞ்சய் தத், ஆதிரா என்ற கதாபாத்திரத்தில் மிரட்டலாக நடித்திருந்தார். இந்நிலையில் ஹ்ரித்திக் கேஜிஎப் 3ல் வில்லனாக இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு
கேஜிஎப் 3 படத்தின் படப்பிடிப்பு தற்போதைக்கு துவங்க வாய்ப்பில்லை என்று தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது. முன்னதாக பிரஷாந்த் நீல் இந்தப் படம் வெளியாக 8 ஆண்டுகள் பிடிக்கும் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் கேஜிஎப் 3 படம் குறித்த அறிவிப்பாவது வெளியாகுமா என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











