KGF 2 : அவன் கத்தி வீசுன வேகத்துல..ஒரு புயலே வீசுச்சி.. யாரும் குறுக்கே போயிடாதீங்க சார் !

சென்னை : கேஜிஎப் 2 திரைப்படத்தின் முதல் சிங்கின் பாடல் இன்று வெளியாகி உள்ளது.

பிரபல கன்னட நடிகர் யாஷ் நடித்த கேஜிஎப் 2 என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் ஏப்ரல் 14ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.

தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி ஆகிய 5 மொழிகளில் இந்த படம் வெளியாக உள்ளது. இதில் யஷ், சஞ்சய் தத், ரவீணா தாண்டன், பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

கே.ஜி.எஃப்

கே.ஜி.எஃப்

பிரபல இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில், யஷ் நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான படம் கே.ஜி.எஃப் : சாப்டர் 1, இந்தப் படத்திற்கு இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்தது. முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் கே.ஜி.எஃப். : சாப்டர் 2 என்ற பெயரில் தயாராகியுள்ளது.

தள்ளிப்போன ரிலீஸ்

தள்ளிப்போன ரிலீஸ்

கடந்த ஆண்டு ஜனவரி மாதமே கே.ஜி.எஃப். : சாப்டர் 2' ஜுலை 16-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கொரோனா இரண்டாம் அலை தீவிரமானதால், பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, திரையரங்குகள் மூடப்பட்டதால், படத்தை திட்டமிட்டப்படி ரிலீஸ் செய்ய முடியாத சூழல் உருவானது. இதையடுத்து கே.ஜி.எஃப். : சாப்டர் 2 படத்தை வரும் ஏப்ரல் மாதம் 14ம் தேதி வெளியாக உள்ளது.

தூஃபான் லிரிக் வீடியோ

தூஃபான் லிரிக் வீடியோ

இந்நிலையில், 'கே.ஜி.எஃப். : சாப்டர் 2 படத்தின் தூஃபான் லிரிக் வீடியோ வெளியாகி உள்ளது. இதில், சாவு எங்க மேல குதியாட்டம் போட்டுச்சு... அப்போ குறுக்க நின்னுட்டு இருந்த ஒருத்தனை அந்த மாரியாத்தா முன்னாடி தலைய சீவினான்...அப்போ ... சாவு மேல நாங்க குதியாட்டம் போட்டோம். அவன் கத்தி வீசுன வேகத்துல.. ஒரு புயலே உருவாகிடுச்சி சார்... அந்த புயல் நராச்சியில இருக்குறவங்களுக்கு உசுறகொடுத்துச்சு, என்ற மிரட்டலான வசனத்துடன் பாடல் வெளியாகி உள்ளது.

நினைவுபடுத்தும் வகையில்

நினைவுபடுத்தும் வகையில்

முதல் பாகத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் மாரியாத்தா முன்பு வில்லனை வதம் செய்து அங்கு கொத்தடிமைகளாக நூற்றுக்கணக்கான மக்களை சாவிலிருந்து காப்பற்றி இருப்பார் யாஷ். அந்த காட்சியும், அந்த இசையும் உண்மையில் உடம்பை சிலிர்க்க வைத்திருக்கும். முதல் பாகத்தை நினைவுபடுத்தும் வகையில் தூஃபான் பாடல் வெளியாகி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X