ரத்தம் தெறிக்க படத்தை எடுக்கிறது.. ஊசின்னா மட்டும் பயமா? கேஜிஎஃப் இயக்குநரை கேலி செய்யும் ஃபேன்ஸ்!
சென்னை: கேஜிஎஃப் இயக்குநர் பிரசாந்த் நீல் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளும் புகைப்படத்தை வெளியிட்டு வைரலாக்கி உள்ளார்.
கேஜிஎஃப் போன்ற அதிரடி ஆக்ஷன் படத்தை எடுத்த இயக்குநரா இவர்? என்கிற கேள்வியை அந்த போட்டோவை பார்த்த அனைத்து ரசிகர்களும் எழுப்பி வருகின்றனர்.
பச்சப் புள்ள தோத்துடும் இப்படியா ஊசி போட பயப்படுவீங்க என ரசிகர்கள் கேலி செய்து கலாய்த்து வருகின்றனர்.

தடுப்பூசி போட்டுக்கிட்டேன்
கடைசியாக நானும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டேன். நீங்களும் உங்களுக்கான தடுப்பூசிக்கு புக் பண்ணிடுங்க என கேஜிஎஃப் இயக்குநர் பிரசாந்த் நீல் பதிவிட்டுள்ள ட்வீட் வைரலாகி வருகிறது. அதற்கு காரணமே தடுப்பூசி போடும் போது, பயத்தால் கண்களை இருக மூடிக் கொண்டிருக்கும் அவரது போட்டோ தான்.

ரவீனா டாண்டன் கமெண்ட்
ரொம்ப க்யூட் பிரசாந்த்.. நான் தடுப்பூசி போட்டுக் கொண்ட வீடியோவை அனுப்புறேன்.. இதை விட அது பயங்கரமாக இருக்கும் என்கிற ரீதியில் நடிகை ரவீனா டாண்டன் கமெண்ட் அடித்து கேஜிஎஃப் இயக்குநரை கலாய்த்துள்ளார். காதலர் தினத்தில் நடித்த அதே ரவீனா தான் கேஜிஎஃப்பில் இந்திரா காந்தி ரோலில் நடித்துள்ளார்.

சினிமாவுல வயலன்ஸ்
சினிமாவுல ரத்தம் தெறிக்க தெறிக்க அவ்வளவு வயலன்ஸா படம் எடுக்க வேண்டியது. ஊசின்னு வந்துட்டா மட்டும் பச்ச புள்ள கணக்கா பயப்படுவது போல நடிப்பது என கேஜிஎஃப் இயக்குநரை பங்கமாக கலாய்த்து வருகின்றனர் அவரது ரசிகர்கள்.

குழந்தை தான்
எவ்வளவு பெரிய கேங்ஸ்டர் படம் எடுத்தாலும், கொரோனாவுக்கு முன்னாடி குழந்தை தான் என பாகுபலி பிரபாஸ் ரம்யா கிருஷ்ணன் மடியில் குழந்தையாக படுத்து உறங்கும் போட்டோவை போட்டு ட்ரோல் செய்து வருகின்றனர்.

உங்க படமும் நீங்களும்
உங்க படம் இப்படி பயங்கரமாக இருக்குது.. ஆனால், நீங்க இப்படி தடுப்பூசிக்குப் போய் பம்முறீங்களே என இந்த போட்டோவை போட்டு பங்கமாக ஓட்டி வருகின்றனர். மேலும், பல டோலிவுட் ரசிகர்களும் பிரசாந்த் நீலை கலாய்த்தும் கேஜிஎஃப் அப்டேட் கேட்டும் கமெண்ட் செய்து வருகின்றானர்.


Click it and Unblock the Notifications











