ரஜினியின் ஜெயிலர் படத்தில் கே ஜி எஃப் நடிகர்? என்ன ரோல் தெரியுமா? எதிர்பார்ப்பில் ரசிகர்கள் !

சென்னை : ஜெயிலர் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் கேஜிஎஃப் பட நடிகர் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலிப்குமார் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், சில வாரங்களுக்கு முன்பு வெளியானது.

ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, விநாயகன், யோகி பாபு மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் ஜெயிலர் படத்தில் முக்கிய ரோலில் நடிக்க உள்ளனர்.

அண்ணாத்த

அண்ணாத்த

சிவா இயக்கத்தில் ரஜினி நடித்த அன்ணாத்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனையடுத்து ரஜினிகாந்த் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிப்பாரென்று அறிவிக்கப்பட்டது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். விஜய் கார்த்திக் கண்ணன் கேமராவை கவனிக்கிறார்.

லீக்கான வீடியோ

லீக்கான வீடியோ

இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் உள்ள பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது, அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு விரைவில் ஹைதராபாத் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் ரஜினிகாந்த் நாற்காலியில் அமர்ந்திருக்கும் காட்சி. கோட் சூட் அணிந்து சக நடிகர்களுடன் பேசி நடிக்கும் காட்சி போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் லீக்காகி வைரலானது இதனால், படக்குழுவினருக்கு அதிர்ச்சி அடைந்தனர்.

கேஜிஎஃப் நடிகர் ஹரிஷ் ராய்

கேஜிஎஃப் நடிகர் ஹரிஷ் ராய்

இந்நிலையில், கேஜிஎஃப் படத்தில் காசிம் சாச்சாவாக நடித்து புகழ் பெற்ற ஹரிஷ் ராய் ஜெயிலர் படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் தைராய்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வாழ்வுக்கும் சாவுக்கும் இடையே போராடிக் கொண்டிருந்தார். அதையடுத்து, கன்னடக திரைத்துறையினர் அவருக்கு வேண்டிய பண உதவிகளை செய்தனர். ஆனால், சிகிச்சைக்கு பின் அவரது குரல் மோசமான நிலையில் இருப்பதால், அவர் மீண்டும் நடிக்கும் வாய்ப்பு இல்லை என்று கூறப்பட்டது.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

புற்றுநோயிலிருந்து ஹரிஷ் ராய் மெல்ல மெல்ல குணமடைந்து வரும் ஹரிஷ் ராய் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள பேட்டியில், ஜெயிலர் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தாகவும், இயக்குனர் நெல்சன் திலீப்குமார், தன்னை தொடர்பு கொண்டு, மொபைல் மூலமாகவே வீடியோ அனுப்பச் சொன்னதாகவும். பின்னர், ஜெயிலர் படத்தில் நடிப்பதை உறுதிப்படுத்தியதாகவும் கூறினார். மேலும் ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த் மற்றும் சிவராஜ்குமார் இருவருடனும் இணைந்து நடிக்க உற்சாகமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X