ஓட்டுப் போட்டு பாபா ஸ்டைலில் போஸ் கொடுத்த கேஜிஃப் ஹீரோ.. மனைவியுடன் எப்படி நிக்கிறாரு பாருங்க!
பெங்களூர்: தமிழ்நாட்டில் கடந்த வாரம் மக்களவை தேர்தல் தொடர்பான வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. கர்நாடகாவில் பிரகாஷ் ராஜ், யஷ், கிச்சா சுதீப் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர். அதே போல கேரளாவிலும் மம்மூட்டி, பகத் ஃபாசில் உள்ளிட்ட பல பிரபல நடிகர்கள் வாக்குகளை செலுத்தி உள்ளனர்.
நடிகர் யஷ் வாக்கு செலுத்தி விட்டு மீடியாவை சந்தித்து அனைவரும் வாக்கு செலுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். கேஜிஎஃப் படத்தின் ஹீரோ என்ட்ரி போலவே அவர் வாக்கு செலுத்த வரும் போது அந்தளவுக்கு ரசிகர்கள் கூட்டம் அவரை மொய்த்து விட்டது.

தனது மனைவியுடன் ஓட்டுப் போட்டு எடுத்துக் கொண்ட செல்ஃபி போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு கன்னட ரசிகர்களை வாக்கு செலுத்த அறிவுறுத்தியுள்ளார் நடிகர் யஷ்.
கேஜிஎஃப் ஹீரோ: பிரசாந்த் நீல் இயக்கத்தில் கேஜிஎஃப் படத்தில் நடித்த யஷ் இந்திய அளவில் மிகப்பெரிய நட்சத்திரமாக மாறியுள்ளார். கேஜிஎஃப் 2 திரைப்படம் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்த நிலையில், ரசிகர்கள் கேஜிஎஃப் திரைப்படத்தை ரொம்பவே எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். பிரபாஸை வைத்து சலார் படத்தை இயக்கிய பிரசாந்த் நீல் அடுத்து எப்போது யஷ்ஷுடன் நினைவால் என்கிற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.
டாக்ஸிக்: நளதமயந்தி படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்த கீதா மோகன்தாஸ் இயக்கத்தில் அடுத்ததாக யஷ் டாக்ஸிக் எனும் படத்தில் நடித்து வருகிறார். அந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு கன்னடத்தில் வெளியான யுவா திரைப்படம் மட்டுமே ஓரளவுக்கு வெற்றியை பெற்றது. மற்றபடி கன்னடத்தில் உலகத்தின் நிலமை படுமோசமாக உள்ளது.

மனைவியுடன் ஓட்டுப்போட்ட யஷ்: மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கர்நாடகாவில் இன்று நடைபெற்ற தேர்தலில் தனது மனைவி ராதிகாவுடன் சென்று நடிகர் யஷ் தனது வாக்கினை செலுத்தினார். அதன் பின்னர் இருவரும் இணைந்து செல்ஃபி எடுத்த புகைப்படத்தை தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

பாபா போஸ்: பாபா படத்தில் நடிகர் ரஜினிகாந்த் கதம் கதம் என சொல்லும்போது கொடுக்கும் போஸ் போல கையை வைத்துக் கொண்டு சைடாக ஓட்டுப் போட்ட விரலை யஷ் காட்டியுள்ளார். கிச்சா சுதீப் ஓட்டு போட்ட பின்னர் ஒவ்வொரு முறையும் மாற்றம் வரும் என்னை நம்பி ஓட்டு போடு்கிறேன். ஆனால் எதுவும் வந்த பாடாக தெரியவில்லை எனக் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











