அம்மா நகம் வெட்டும் போது கூட.. எவ்ளோ அழகா குழந்தை சிரிக்குது பாருங்க.. கொடுத்த வச்ச கேஜிஎஃப் ஹீரோ!

பெங்களூரு: கன்னட நடிகர் யஷ்ஷின் மகன் நகம் வெட்டும் போது கூட சிரிக்கும் செம க்யூட்டான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கேஜிஎஃப் படத்தின் மூலம் உலகளவில் பிரபலமாகி உள்ளார் நடிகர் யஷ்.

கடந்த 2016ம் ஆண்டு ராதிகா பண்டித் என்பவரை திருமணம் செய்து கொண்ட நம்ம ராக்கி பாய்க்கு அழகான இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

கேஜிஎஃப் 2வுக்கு வெயிட்டிங்

கேஜிஎஃப் 2வுக்கு வெயிட்டிங்

இந்த ஆண்டு வெளியாகவுள்ள கேஜிஎஃப் 2 படத்திற்காக இந்திய திரையுலகமே ஆவலுடன் காத்திருக்கிறது. இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான முதல் பாகம் 250 கோடிக்கும் மேல் வசூல் ஈட்டி கன்னட திரையுலகை இந்திய திரையுலகமே திரும்பி பார்க்க வைத்தது.

நடிகையுடன் திருமணம்

நடிகையுடன் திருமணம்

மொதலசாலா, கிராதகா, ராஜதானி, டிராமா, கூக்ளி, கஜகேசரி, மாஸ்டர் பீஸ் உள்ளிட்ட ஹிட் படங்களுக்கு பிறகே கேஜிஎஃப் படத்தில் நடித்தவர் நடிகர் யஷ். கடந்த 2016ம் ஆண்டு தான் நீண்ட நாட்களாக காதலித்து வந்த நடிகை ராதிகா பண்டிதை திருமணம் செய்து கொண்டார். இருவரும் இணைந்து மிஸ்டர் அண்ட் மிசஸ் ராமாச்சாரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளனர்.

க்யூட்டான குழந்தைகள்

க்யூட்டான குழந்தைகள்

காதலித்த நடிகையையே கரம் பிடித்த நடிகர் யஷ்ஷுக்கு 2018ம் ஆண்டு பெண் குழந்தையும் 2019ம் ஆண்டு அழகான ஆண் குழந்தையும் பிறந்தது. பெண் குழந்தைக்கு ஐரா என்றும் ஆண் குழந்தைக்கு யாதர்வ் என்றும் பெயர் சூட்டி உள்ளனர். கேஜிஎஃப் நடிகரின் க்யூட்டான குழந்தைகளின் புகைப்படங்களும் அவ்வப்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

நகம் வெட்டும் வீடியோ

நகம் வெட்டும் வீடியோ

இந்நிலையில், தற்போது மகன் யாதர்வுக்கு நகம் வெட்டும் வீடியோவை வெளியிட்டுள்ளார் நடிகர் யஷ்ஷின் மனைவி ராதிகா பண்டித். நகம் வெட்டும் வீடியோவில் என்னப்பா விசேஷம் என் கேட்கும் ரசிகர்கள் நிச்சயம் இந்த வீடியோவை பார்க்க வேண்டும். நகம் வெட்டும் போது பொதுவாக குழந்தைகள் அழுவதை தான் பார்த்திருப்போம். ஆனால் நம்ம ராக்கி பாயின் குழந்தை அழகாக சிரிக்கிறது.

சிரிக்கும் குழந்தை

ஒவ்வொரு முறையும் தனது அம்மா தனக்கு நகம் வெட்டுவதை பார்த்துக் கொண்டே செம க்யூட்டாக யாதர்வ் சிரிக்கும் வீடியோ பார்த்த மாத்திரத்திலேயே லைக் செய்யும் விதமாக உள்ளது. நடிகர் யஷ்ஷின் செல்ல மகனின் இந்த வீடியோவை பலரும் பார்த்து வியந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X