Actor Yash :அடுத்தப்படம் குறித்து யாஷ் திட்டம்.. இதுவா அதுவா குழப்பத்தில் ரசிகர்கள்!
பெங்களூரு : கேஜிஎப் படங்களின் மூலம் சர்வதேச அளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் கன்னட நடிகர் யாஷ்.
பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கேஜிஎப் மற்றும் கேஜிஎப் 2 படங்கள் வசூலில் மிரட்டியது. பாலிவுட்டில் மட்டுமே கேஜிஎப் 2 படம் 500 கோடிகளுக்கும் மேல் வசூலித்தது.
இதையடுத்து கேஜிஎப் 3 படம்குறித்து ரசிகர்கள் அதிகமான எதிர்பார்ப்புடன் காணப்படுகின்றன. தற்போது சலார் படத்தில் பிரசாந்த் நீல் கவனம் செலுத்தி வருகிறார்.
நடிகர் யாஷ்
நடிகர் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து இரண்டு பாகங்களாக வெளியானது கேஜிஎப் மற்றும் கேஜிஎப் 2 படங்கள். முதல் பாகத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த கேஜிஎப், இரண்டாவது பாகத்தில் சிறப்பான விமர்சனங்களை மட்டுமில்லாமல் வசூலிலும் மிரட்டியது. அதிகமான கவனத்தை ஈர்க்காத கன்னட திரையுலகில் சமீப காலங்களில் சிறப்பான பல படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில் கேஜிஎப் படங்கள் கன்னட திரையுலகை பிரமிப்புடன் பார்க்க வைத்தன.

கேஜிஎப் படங்கள்
பிரஷாந்த் நீல் இயக்கத்தில் வெளியான இந்தப் படங்களை தன்னுடைய நடிப்பின்மூலம் சிறப்பாக்கினார் யாஷ். அவர் இந்தப் படத்தின் சிறப்பான தேர்வாக பார்க்கப்பட்டார். கன்னடத்தில் உருவான இநத்ப் படம் பான் இந்தியா படமாக வெளியானது. படத்தை தயாரித்திருந்த ஹம்பாலே பிலிம்ஸ் படத்தை ரசிகர்களிடம் சிறப்பாக கொண்டு சேர்த்தது. வெளியான மற்ற மொழிகளிலும் இந்தப் படம் நல்ல விமர்சனங்களையும் சிறப்பான வசூலையும் பெற்றது.
வசூலில் மிரட்டிய கேஜிஎப் 2
முதல் பாகம் கேஜிஎப் படத்திற்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், இரண்டாவது பாகம் வசூலில் மிரட்டியது. குறிப்பாக பாலிவுட்டில் இந்தப் படம் 500 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்தது. கன்னடத் திரையுலகில் அதிகமான பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. படத்தில் அதிகமான ஆக்ஷன் காட்சிகள் அமைந்துள்ள நிலையில், ஒவ்வொரு காட்சியும் இடியாக அமைந்துள்ளது.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு
இந்தப் படத்தின் இரண்டு பாகங்களும் சிறப்பான வரவேற்பை பெற்ற நிலையில், மூன்றாவது பாகம் குறித்து ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காணப்படுகின்றனர். தற்போது பிரபாஸ் நடிப்பில் சலார் படத்தை பிரஷாந்த் நீல் இயக்கி முடித்துள்ள நிலையில், அடுத்ததாக கேஜிஎப் 3 படத்தின் வேலைகளில் ஈடுபடுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. விரைவில் இதற்கான வேலைகள் துவங்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாலிவுட்டில் யாஷ்?
இதனிடையே நடிகர் யாஷ், நேரடி இந்திப் படத்தில் நடிக்கவுள்ளதாகவும் அதற்கான கதையை கேட்டு இறுதி செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் கேஜிஎப் 3 படத்தை முடித்துவிட்டுதான் அவர் நேரடி இந்திப் படத்தில் நடிக்கவுள்ளார் என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேஜிஎப் 2 படம் பாலிவுட்டில் சிறப்பான வரவேற்பை பெற்ற நிலையில், அவர் பாலிவுட்டில் நேரடி படத்தில் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்கள் குழப்பம்
நடிகர் யாஷ் கேஜிஎப் 3 படத்தில் நடிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக உள்ளது. ஆனால் ஒரு கன்னட நடிகர் நேரடியாக பாலிவுட் படத்தில் நடிப்பதும் சிறப்பானதாக பார்க்கப்படுகிறது. இந்த இரு படங்களில் எதில் முதலில் நடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் காணப்படுகின்றனர். அவர்களின் இந்த குழப்பத்தை கேஜிஎப் படங்களை தயாரித்த ஹம்பாலே நிறுவனம் மட்டுமே தீர்த்து வைக்க முடியும். விரைவில் கேஜிஎப் 3 படம் குறித்த அறிவிப்பு வெளியானால் மட்டுமே இந்தக் குழப்பங்களுக்கு விடை கிடைக்கும்


Click it and Unblock the Notifications











