லியோ டைட்டில் ப்ரோமோ... விஜய்க்கு கால் செய்த கேஜிஎஃப் ஹீரோ யாஷ்... இப்படியொரு ரியாக்ஷனா
சென்னை: விஜய் நடித்து வரும் தளபதி 67 படத்தின் டைட்டில் லியோ என கடந்த வாரம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது.
அனிருத்தின் பிஜிஎம்மில் வெளியான லியோ டைட்டில் ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
லியோ டைட்டில் ப்ரோமோ வெளியானது முதல் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
இந்நிலையில், லியோ டைட்டில் ப்ரோமோவை பார்த்த கேஜிஎஃப் ஹீரோ யாஷ் விஜய்க்கு போன் செய்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிரிபுதிரியாக உருவாகும் லியோ
விஜய்யின் 67வது படமாக உருவாகி வருகிறது லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 என்ற டைட்டிலில் தொடங்கப்பட்ட லியோ ஷூட்டிங் தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. முதற்கட்ட படப்பிடிப்பை சென்னையில் முடித்த படக்குழு அதனைத் தொடர்ந்து காஷ்மீரில் முகாமிட்டுள்ளது. நேற்றைய தினம் லியோ படப்பிடிப்பில் எடுத்த போட்டோவை லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டரில் ஷேர் செய்திருந்தார்.

விஜய்க்கு கால் செய்த யாஷ்
லோகேஷ் ஷேர் செய்திருந்த போட்டோவின் நடுவில் தீ கொளுந்துவிட்டு எரிய, அதன் பின்னணியில் விஜய், லோகேஷ், ஸ்டண்ட் மாஸ்டர்ஸ் அன்பறிவ் ப்ரதர்ஸ் ஆகியோருடன் கெளதம் மேனன், மேத்யூ தாமஸ் ஆகியோரும் இருந்தனர். இந்த போட்டோ தொடர்ந்து டிவிட்டரில் ட்ரெண்டாகி வருகிற்து. இந்நிலையில், கேஜிஎஃப் ஹீரோ லியோ டைட்டில் ப்ரோமோவை பார்த்து விஜய்க்கு கால் செய்து பேசியதாக சொல்லப்படுகிறது.

யாஷ் ரியாக்ஷன் இதுதனா?
விஜய்யின் பீஸ்ட் திரைப்படமும் யாஷ் நடித்த கேஜிஎஃப் இரண்டாம் பாகமும் கடந்தாண்டு ஏப்ரலில் வெளியானது. இதில் யாஷின் கேஜிஎஃப் 2, பாக்ஸ் ஆபிஸில் பீஸ்ட் படத்திற்கு கடும் சவாலாக அமைந்தது. முக்கியமாக கேஜிஎஃப் 2-க்கு கிடைத்த வரவேற்பால் பீஸ்ட் படத்தின் வசூல் பாதிக்கப்பட்டதாகவும் சொல்லப்பட்டது. இந்நிலையில், லியோ டைட்டில் ப்ரோமோவை பார்த்த யாஷ், விஜய்க்கு கால் செய்து பாராட்டியதாகக் கூறப்படுகிறது.

உற்சாகத்தில் லியோ டீம்
அதாவது லியோ படத்தின் டீசர் செம கிளாஸாக இருப்பதாக விஜய்யிடம் கூறினாராம் யாஷ். மேலும் இப்போதே இந்த படத்தின் வெற்றி 100 சதவீதம் உறுதி என்றும் அவர் கூறியுள்ளாராம். இதனால் விஜய் மட்டும் இல்லாமல் லியோ படக்குழுவினரும் உற்சாகத்தில் உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் விஜய்யிடம் யாஷ் போனில் பேசியது குறித்து படக்குழு தரப்பில் இருந்து எந்த அப்டேட்டும் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இனி அடுத்தடுத்து அப்டேட் தான்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படத்தில் த்ரிஷா, ப்ரியா ஆனந்த், சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான், கெளதம் மேனன், ஜார்ஜ் மரியான், மேத்யூ தாமஸ், சாண்டி மாஸ்டர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். காஷ்மீர் ஷூட்டிங் முடிந்ததும் லியோ படத்தின் அடுத்த அப்டேட் வரும் என சொல்லப்படுகிறது. இந்தப் படம் ஆயுத விடுமுறைக்கு ரிலீஸாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











