பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் ராக்கி பாய்… பிரம்மாஸ்திரா 2, கர்ணா பிரம்மாண்ட கூட்டணியில் யாஷ்?
மும்பை: கேஜிஎஃப் படம் மூலம் பான் இந்தியா சூப்பர் ஸ்டாராக கலக்கி வருபவர் நடிகர் யாஷ்.
கன்னடத்தில் சின்ன பட்ஜெட் படங்களில் நடித்து வந்த யாஷ், இப்போது பாக்ஸ் ஆபிஸில் பட்டையைக் கிளப்பி வருகிறார்.
யாஷ்க்கு முதன்முறையாக பாலிவுட்டில் இரண்டு மெகா பட்ஜெட் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பான் இந்தியா ஸ்டார்
சீரியல் நடிகரான யாஷ், 2007ம் ஆண்டு ஜம்படா ஹுடுகி என்ற படம் மூலம் கன்னடை திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து சின்ன பட்ஜெட் படங்களில் நடித்து வந்த அவருக்கு 'கேஜிஎஃப்' திரைப்படம் மிகப் பெரிய கம்பேக் கொடுத்தது. அதுவரை இந்திய திரையுலகமே பார்த்திடாத மெகா ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்து பாக்ஸ் ஆபிஸையும் மிரட்டியது கேஜிஎஃப். 2018ம் ஆண்டு கேஜிஎஃப் முதல் பாகமும், இந்தாண்டு ஏப்ரலில் இரண்டாம் பாகமும் வெளியானது. முதல் பாகத்தை விடவும் செகண்ட் பார்டுக்கு கிடைத்த வசூல் பலரையும் பிரமிக்க வைத்தது. சுமார் ஆயிரத்து 400 கோடி ரூபாய் வசூலித்து மாஸ் காட்டியது.

யாஷ்க்கு வரவேற்பு
கேஜிஎஃப் படத்தில் ராக்கி பாயாக மிரட்டிய யாஷுக்கு இந்தியா முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதனால், அவர் நடிக்கும் படங்கள் மீதான எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. விரைவில் கேஜிஎஃப் 3ம் பாகமும் உருவாகும் என இயக்குநர் பிரசாந்த் நீல் தெரிவித்துள்ளார். அதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில், யாஷ் தற்போது அவரது 19வது படத்தில் நடித்து வருகிறார். இதுவும் பான் இந்தியா படமாக உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

பாலிவுட்டில் அறிமுகம்?
இந்நிலையில், நடிகர் யாஷ் பாலிவுட்டில் அறிமுகமாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பான் இந்தியா ஸ்டார் என்ற ஃபேஸ் வேல்யூ யாஷ்க்கு இருப்பதால், அவரை பாலிவுட்டில் உருவாகும் இரண்டு பிரம்மாண்டமான படங்களில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாம். அதன்படி, அயன் முகர்ஜி இயக்கும் பிரம்மாஸ்திரா இரண்டாம் பாகத்தில் யாஷ் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. ரன்பீர் கபூர், ஆலியா பட், அமிதாப்பச்சன் ஆகியோர் நடிப்பில் கடந்த மாதம் 9ம் தேதி பிரம்மாஸ்திரம் வெளியானது. தற்போது அதன் இரண்டாம் பாகத்தில் யாஷ் நடிக்கவுள்ளதாகவும், விரைவில் அபிஸியல் அப்டேட் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கர்ணாவில் யாஷ்
அதேபோல், ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா இயக்கவுள்ள கர்ணா படத்திலும் யாஷ் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படம் நூறு கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் ரொம்பவே பிரம்மாண்டமாக உருவாகவுள்ளது. இதில் யாஷை முக்கியமான கேரக்டரில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். கர்ணா படத்தில் யாஷ் நடிப்பது பற்றியும் விரைவில் அறிவிப்பு வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது. கேஜிஎஃப் மூலம் லைம் லைட்டில் வந்த யாஷ், இப்போது பாலிவுட்டிலும் என்ட்ரி கொடுக்கவுள்ளது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











