வீட்டுல விசேஷமுங்கோ.. ஆண் குழந்தைக்கு அப்பாவானார் கேஜிஎஃப் ஹீரோ!

கேஜிஎஃப் நாயகன் யஷ்-ராதிகா பண்டித் தம்பதியினருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஏற்கனவே இவர்களுக்கு அயிரா என்ற அழகிய பெண் குழந்தை இருப்பது குறிப்பிடத்தக்கது.

பெங்களூரு: கன்னட நடிகர் யஷ் மற்றும் ராதிகா பண்டித் தம்பதியினருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது.

பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரசவ வலியுடன் அனுமதிக்கப்பட்ட கன்னட நடிகர் யஷ்ஷின் மனைவிக்கு இன்று அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது.

KGF Hero Yash welcome his second child, a baby boy

தீபாவளி பண்டிகை முடிந்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு விழாக்காலம் நடிகர் யஷ் வீட்டில் களைகட்டியுள்ளது.

கேஜிஎஃப் படத்தில் நடித்ததன் மூலம் நடிகர் யஷ், இந்தியா முழுவதும் பிரபலமானார். சமீபத்தில் இந்த படத்திற்கு தேசிய விருதும் அறிவிக்கப்பட்டிருந்தது.

கேஜிஎஃப் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங்கில் பிசியாக நடித்து வரும் நடிகர் யஷ்ஷுக்கு இரண்டாவதாக அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையின் பிஞ்சு விரல் நடிகர் யஷ்ஷின் விரலை பிடித்திருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட யஷ், இந்த இனிப்பான செய்தியை அறிவித்தார்.

கேஜிஎஃப் இரண்டாம் பாதியில் இந்திரா காந்தி வேடத்தில் நடிகை ரவீணா டாண்டனும், வில்லன் ஆதிராவாக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தும் நடித்து வரும் நிலையில், அந்த படத்திற்கான எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளது.

யஷ் மற்றும் ராதிகா தம்பதியினருக்கு கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் 2ம் தேதி அயிரா எனும் பெண் குழந்தை பிறந்தது. தற்போது, அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ள நிலையில், பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் யஷ் மற்றும் அவரது குழந்தையை வாழ்த்தி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X