Ramayana: கேஜிஎஃப் ஹீரோ ராவணனாம்? ஆதிபுருஷை தொடர்ந்து அடுத்த ராமாயணம்.. ராமர் யார் தெரியுமா?

மும்பை: சம்பூர்வ ராமாயணம் தொடங்கி ஏகப்பட்ட ராமாயணம் படங்களாகவும் சீரியல்களாகவும் காலத்துக்கு ஏற்ப வந்துக் கொண்டே இருக்கின்றன. அந்த வரிசையில் ஆதிபுருஷை தொடர்ந்து இன்னொரு ராமாயணம் படத்தை மீண்டும் பாலிவுட்டில் உருவாக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அமீர்கானை வைத்து 2000 கோடி வசூலை தேற்றிய தங்கல் பட இயக்குநர் நிதேஷ் திவாரி தான் இந்த பிரம்மாண்ட படத்தை 500 கோடி பட்ஜெட்டில் எடுக்கப் போவதாக கூறுகின்றனர்.

இதில், ராவணனாக நடிக்க கேஜிஎஃப் பட ஹீரோ யஷ்ஷை தேர்வு செய்திருப்பதாக வெளியான தகவல்கள் தான் பாலிவுட்டை மட்டுமல்ல இந்திய திரையுலகத்தையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.

KGF Hero Yash will play Ravana in Ranbir Kapoors Ramayana?

ராமாயணக் கதையில் ஆதிபுருஷ்: பாலிவுட் இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ், க்ருத்தி சனோன், சைஃப் அலி கான் நடிப்பில் லைவ் ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகி உள்ள ஆதிபுருஷ் படம் அடுத்த வாரம் உலகளவில் பிரம்மாண்டமாக வெளியாகிறது. சமீபத்தில், அந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா வேறலெவலில் நடைபெற்றது.

மீசை வைத்த ராமராக நடிகர் பிரபாஸ் ஆதிபுருஷ் படத்தில் நடித்துள்ளார். அதிலும், தென்னிந்தியர் ஒருவருக்கு ராமராக நடிக்கும் வாய்ப்பை பாலிவுட் இயக்குநர் கொடுத்ததே தனிச்சிறப்பு என பார்க்கின்றனர்.

KGF Hero Yash will play Ravana in Ranbir Kapoors Ramayana?

அடுத்த ராமாயணம்: இந்நிலையில், பாலிவுட் ஹீரோவான ரன்பீர் கபூரை வைத்து ராமாயணா எனும் தலைப்பிலேயே ஒரு படத்தை இயக்க இயக்குநர் நிதேஷ் திவாரி முடிவு செய்துள்ளதாக ஹாட் தகவல்கள் பாலிவுட்டை உலுக்கி வருகின்றன.

ரன்பீர் கபூர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான பிரம்மாஸ்திரம் படமே பெரிதாக ஓடாத நிலையில், அதன் அடுத்த பாக பணிகள் அப்படியே நின்று விட்டன. இந்நிலையில், ராமராக நடிகர் ரன்பீர் கபூர் நடிக்கப் போவதாக கூறுகின்றனர்.

KGF Hero Yash will play Ravana in Ranbir Kapoors Ramayana?

ஆலியா பட் தான் சீதை: ராமராக ரன்பீர் கபூர் நடிக்கிறார் என்றால் ஆட்டோமேடிக்காக சீதையாக ஆலியா பட் தானே நடிப்பார். நிதேஷ் திவாரியின் அலுவலகத்திற்கு நேற்று நடிகை ஆலியா பட் சென்று பேச்சுவார்த்தை நடத்திய தகவல் லீக் ஆன நிலையில் தான் ராமாயணா ஹாஷ்டேக் இந்தியளவில் டிரெண்டாகி வருகிறது.

ராவணன் யார்: ஆதிபுருஷ் படத்தில் தென்னிந்திய நடிகர் பிரபாஸை ராமராகவும் பாலிவுட் நடிகர் சைஃப் அலி கானை ராவணனாகவும் போட்டிருந்த நிலையில், இந்த ராமாயண படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும் கேஜிஎஃப் ஹீரோ யஷ் ராவணனாகவும் நடிக்கப் போவதாக சோஷியல் மீடியாவே அனல் பறக்கின்றன.

விரைவில் இந்த பிரம்மாண்ட படம் குறித்த உறுதியான அறிவிப்புகள் வெளியாகும் என்கின்றனர். வேறு யாராவது இயக்குநர்களும் ராமாயணம் படத்தை எடுக்க சீட் போட்டு வச்சிருக்கீங்களாப்பா!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X