twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    திருட்டுத்தனமாக கே.ஜி.எப் படத்தை வெளியிடுவதா? அந்த சேனல் மீது வழக்கு தொடர தயாரிப்பாளர் முடிவு

    By
    |

    பெங்களூரு: கே.ஜி.எப் படத்தை திருட்டுத்தனமாக வெளியிட்ட உள்ளூர் சேனல் மீது வழக்குத் தொடர இருப்பதாக அதன் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

    Recommended Video

    Celebrities Self Quarantine | Bharath | Yash | Arun Vijay

    யஷ் நடித்த 'கே.ஜி.எப்' படம் கன்னடம் தவிர தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு மொழிகளில் கடந்த 2018 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது.

    பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்தப் படம், சூப்பர் ஹிட்டானது. படம் மொத்தம் ரூ.250 கோடி வசூலித்து சாதனைப் படைத்தது.

    அதை கழட்டினா போதும்.. கவர் போட்டோவில் இடம் கிடைக்கும்.. இதுதான் நிதி அகர்வாலின் புது லாஜிக்!அதை கழட்டினா போதும்.. கவர் போட்டோவில் இடம் கிடைக்கும்.. இதுதான் நிதி அகர்வாலின் புது லாஜிக்!

    ஶ்ரீனிதி ஷெட்டி

    ஶ்ரீனிதி ஷெட்டி

    நீல் பிரஷாந்த் இயக்கிய இந்த படத்தில் ஶ்ரீனிதி ஷெட்டி ஹீரோயினாக நடித்திருந்தார். ஆனந்த் நாக், மாளவிகா அவினாஷ், ராமச்சந்திர ராஜு, வசிஷ்டா எம்.சிம்ஹா உட்பட பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்தை நடிகர் விஷால், தமிழில் வெளியிட்டார். பீரியட் ஆக்‌ஷன் படமான இந்தப் படம் தமிழிலும் நல்ல வரவேற்பை பெற்றது.

    கேஜிஎப் சாப்டர் 2

    கேஜிஎப் சாப்டர் 2

    இதையடுத்து இப்போது இதன் இரண்டாம் பாகம் இன்னும் அதிக பட்ஜெட்டில், கேஜிஎப் சாப்டர் 2 என்ற பெயரில் உருவாகி வருகிறது. முதல் பாகத்தை இயக்கிய பிரசாந்த் நீல், இதையும் இயக்குகிறார். முதல் பாகத்தில் நடித்த ஶ்ரீனிதி ஷெட்டி ஹீரோயினாக நடிக்கிறார். ஆனந்த் நாக், மாளவிகா அவினாஷ் உட்பட பலர் நடிக்கின்றனர்.

    எதிர்பார்ப்பு

    எதிர்பார்ப்பு

    இந்தி நடிகர் சஞ்சய் தத், ஆக்ரோஷ வில்லனாக அதீரா என்ற கேரக்டரில் நடிக்கிறார். முதல் பாகத்தை தமிழில் வெளியிட்ட விஷால், இரண்டாம் பாகத்தையும் வெளியிடுகிறார். முதல் பாகம் ஹிட்டானதால், இரண்டாம் பாகத்துக்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதை அதிகரிக்கும் வகையில், இந்த படத்தின் போஸ்டர்கள் அமைந்துள்ளதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

    திருட்டுத்தனமாக

    திருட்டுத்தனமாக

    இந்நிலையில், இந்தப் படத்தை திருட்டுத்தனமாக எவரெஸ்ட் என்ற தெலுங்கு உள்ளூர் சேனல் வெளியிட்டுள்ளதாக அதன் தயாரிப்பாளர் கார்த்திக் கவுடா புகார் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர், கே.ஜி.எப் படத்தின் தெலுங்கு சேட்டிலைட் உரிமையை விற்பது தொடர்பான பேச்சுவார்த்தை முடிவடையும் நிலையில் உள்ள சூழலில், எவரெஸ்ட் என்ற உள்ளூர் சேனல் இந்தப் படத்தைத் திருட்டுத்தனமாக ஒளிபரப்பி உள்ளது.

    உள்ளூர் சேனல்கள்

    உள்ளூர் சேனல்கள்

    இதுபற்றி சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க இருக்கிறோம்' என்று அவர் தெரிவித்துள்ளார். அந்த சேனலில் கே.ஜி.எப் படம் ஒளிபரப்பாகும் புகைப்படைத்தையும் அவர் பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தை தமிழிலும் சில உள்ளூர் சேனல்கள் திருட்டுத்தனமாக ஒளிபரப்பியதை அடுத்து புகார் கொடுக்கப்பட்டிருந்தது.

    English summary
    The makers of 'KGF' have decided to sue a local Telugu channel for broadcasting their movie illegally
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X