Don't Miss!
- News
"குலுங்கி குலுங்கி" அழுத ராஜன்.. இப்ப ஆதரவு.. கூட்டணியை மதித்த ஸ்டாலின்.. ஈவிகேஎஸ் தேர்வானது எப்படி?
- Lifestyle
உங்க ராசிப்படி சொர்க்கத்தில் உங்களுக்காக நிச்சயிக்கப்பட்ட ஜோடி ராசி எது தெரியுமா? ஷாக் ஆகாம படிங்க!
- Automobiles
இந்தியால இதுக்கு முன்னாடி இப்படி ஒரு ஹெல்மெட் தயாரிக்கல... இதோட சிறப்பு என்ன தெரிஞ்சா கடைக்கு இப்பவே ஓடுவீங்க!
- Finance
ரூ.10,000 டூ ரூ.3 கோடியான கதை.. 22 பென்னி பங்குகள் கொடுத்த ஜாக்பாட் சான்ஸ்.. இனி கிடைக்குமா?
- Sports
கே.எல்.ராகுல் - ஆதியா ஷெட்டிக்கு கெட்டி மேளம்.. கோலாகலமாக நடந்த திருமணம்.. வரவேற்பு எப்போது தெரியுமா
- Technology
ரூ.6,999க்கு அறிமுகமான ஸ்மார்ட்போன்! 124 மணிநேர பேட்டரி ஆயுள்.. இது எப்படி இருக்கு?
- Travel
இந்திய எல்லையில் இவ்வளவு அழகிய சுற்றுலாத் தலங்கள் இருக்கின்றனவா – இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!
- Education
LIC ADO Recruitment 2023:எல்.ஐ.சி.,யில் 1516 பட்டதாரிகளுக்கு வாய்ப்பு...!
ட்விட்டரில் இருந்து விலகிய கேஜிஎப் ஹீரோ யாஷ்.. சிறிய ப்ரேக்தான் என்று பதிவு!
பெங்களூரு : கேஜிஎப் படங்களின் நாயகன் யாஷ், அந்தப் படங்களுக்கு சிறப்பாக உயிர் கொடுத்திருந்தார்.
இந்த இரு படங்களும் சர்வதேச அளவில் சிறப்பான வரவேற்பையும் வசூலையும் பெற்றிருந்தன.
படத்தின் அடுத்த பாகம் வரும் 2025ல் துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சலார் படத்தில் இயக்குநர் பிரஷாந்த் நீல் படத்தின் அடுத்த பாகம் வரும் 2025ல் துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சலார் படத்தில் இயக்குநர் பிரஷாந்த் நீல் பிசியாக உள்ளார். பிசியாக உள்ளார்.
'Thunivu' Public Review : துணிவு படம் எப்படி இருக்கு?? பொதுமக்கள் விமர்சனம்!

கேஜிஎப் ஹீரோ யாஷ்
நடிகர் யாஷ் நடிப்பில் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கேஜிஎப் 1 மற்றும் 2 படங்கள் மிகச்சிறந்த வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றுள்ளது. சர்வதேச அளவில் இந்தப் படங்கள் வசூல் சாதனையும் புரிந்துள்ளன. படத்தில் தன்னுடைய கேரக்டருக்கு சிறப்பான வடிவத்தை கொடுத்திருந்தார் யாஷ். அவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருந்தார். இரண்டாவது பாகத்தில் சஞ்சய் தத் மிரட்டியிருந்தார்.

பான் இந்தியா ஸ்டார்
ஒரு ஒட்டுநரின் மகனான யாஷ், தற்போது பான் இந்தியா ஸ்டாராக தன்னை உயர்த்திக் கொண்டுள்ளார். ஆனால் இந்த உயரத்தை எட்டுவதற்காக அவர் அடைந்த வலிகள் அதிகம். மேடை நாடகங்களில் தன்னுடைய கேரியரை துவங்கிய இவர், தொடர்ந்து சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து, அதன்மூலம் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

வெற்றியை குவித்த கேஜிஎப் படங்கள்
கடந்த 2008ல் மோகின மனசு என்ற படத்தின்மூலம் ஹீரோவாக தன்னுடைய சினிமா பயணத்தை துவங்கிய யாஷிற்கு கடந்த 2018ல் வெளியான கேஜிஎப் மிகச்சிறந்த வெற்றியை கொடுத்தது. பான் இந்தியா படமாக வெளியான இந்தப் படம் சர்வதேச அளவில் 200 கோடி ரூபாய் வசூலை தாண்டி சாதனை செய்தது. கன்னட சினிமாவை மற்ற மொழி ரசிகர்கள் திரும்பி பார்க்கும் வகையில் இந்தப் படம் சாதனை படைத்தது. இந்தப் படத்தை பிரபல இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கியிருந்தார்.

இந்திய அளவில் ரசிகர்கள்
தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் யாஷிற்கு ஏராளமான ரசிகர்கள் உருவான நிலையில் கடந்த ஆண்டில் கேஜிஎப் படத்தின் இரண்டாவது பாகம் வெளியானது. மூன்று ஆண்டுகள் கழித்து வெளியான நிலையில் இந்தப் படமும் சர்வதேச அளவில் அதிகமான வசூலையும் வரவேற்பையும் பெற்றது. இதனிடையே கடந்த 8ம் தேதி தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடிய யாஷ், நம்பிக்கைதான் தன்னுடைய வாழ்க்கையை மாற்றியது என்று தெரிவித்துள்ளார்.

ட்விட்டரில் இருந்து விலகிய யாஷ்
தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக காணப்பட்ட யாஷ், தற்போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும் ட்விட்டரில் இருந்த பிரேக் எடுத்துக் கொள்ள விரும்புவதாகவும் யாஷ்19 படத்தின் அறிவிப்பிற்கு பிறகு மீண்டும் ட்விட்டர் பக்கத்தில் இணையவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.