சகோதரத்துவத்தை உணர்த்தும் ரக்ஷா பந்தன்…ட்விட்டரில் உருகிய யாஷ் !
சென்னை : சகோதரத்துவத்தை உணர்த்தும் ரக்ஷா பந்தன் நாளான இன்று யாஷின் சகோதரி நந்தினி தனது சகோதரருக்கு ராக்கி கட்டி உள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
யாஷ் என்ற பெயரை உச்சரிக்காத உதடுகளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு இமாலய உச்சத்திற்கு சென்று விட்டார் யாஷ்.
நவீன்குமார் என்ற இயற்பெயர் கொண்ட யாஷ், நடிகராக வேண்டும் என்ற வெறித்தனமான கனவை மட்டுமே குறிக்கோளாக கொண்டு இன்று வாழ்க்கையில் வெற்றி பெற்றுள்ளார்.

கேஜிஎஃப் பாகம் 2
கேஜிஎஃப் முதல் பாகத்தில் கிடைத்த வரவேற்பை விட இரண்டாம் பாகத்தில் ஒவ்வொரு காட்சியிலும் மிரட்டி இருப்பார் யாஷ். திடமான தேகம், ஷார்ப்பான பார்வை, மிரட்டலான நடிப்பு, அம்மாவுக்காக பறிதவிக்கும் மனம் என ஒவ்வொரு காட்சியிலும், யாருக்கும் சளைத்தவர் இல்லை என்பதை நிரூபித்து இருப்பார்.

திரும்ப திரும்ப பார்த்த ரசிகர்கள்
கே.ஜி.எஃப் பார்ட் 2 கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியாகி உலகம் முழுவதும் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது.உச்ச நட்சத்திரத்தின் படத்தையே ஓவர்டேக் செய்யும் அளவுக்கு, கேஜிஎஃப் 2 மீதான ஈர்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் காணப்பட்டது. இதனை நிறைவு செய்யும் வகையில், படம் அமைந்ததால் ரசிகர்கள் திரும்பத் திரும்ப இந்த படத்தை பார்த்து கொண்டாடினர்.

ரூ.1200 கோடி வசூல்
உலகம் முழுவதும் இந்தத் திரைப்படம் 1200 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்தது. இந்திய சினிமாவில் பாகுபலி-2 மற்றும் தங்கல் படத்திற்கு அடுத்தபடியாக அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையை கேஜிஎஃப் 2 பெற்றிருக்கிறது. இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் 3ம் பாகத்திற்காக லிங்க் உள்ளதால், அடுத்த பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Recommended Video

ரக்ஷா பந்தன்
இந்நிலையில், சகோதரத்துவத்தை உணர்த்தும் ரக்ஷா பந்தன் நாளான இன்று யாஷின் சகோதரி நந்தினி தனது சகோதரருக்கு ராக்கி கட்டி இனிப்பு வழங்கி உள்ளார். இந்த புகைப்படத்தை யாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உடன்பிறப்புகள் விதியால் ஒன்றாக சேர்க்கப்பட்டாலும், வாழ்நாள் முழுவதும் அன்பு மற்றும் ஆதரவால் பிணைக்கப்பட்டவர்கள். அனைவருக்கும் இனிய ரக்ஷா பந்தன் வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











