ராயல் சல்யூட் ராக்கி பாய்.. 3000 குடும்பங்களுக்கு தலா ரூ.5000 நிதியளித்த நடிகர் யஷ்!

பெங்களூரு: கேஜிஎஃப் படத்தின் மூலம் உலகப் புகழ் அடைந்துள்ள கன்னட நடிகர் யஷ் கொரோனா காரணமாக போடப்பட்டுள்ள லாக்டவுனில் பசியால் வாடி சினிமா தொழிலாளர்கள் யாரும் உயிரிழக்கக் கூடாது என சூப்பரான உதவி செய்துள்ளார்.

கன்னட திரையுலகை சேர்ந்த சினிமா தொழிலாளர்கள் 3000 பேருக்கு தலா 5000 ரூபாய் நிதி அளித்து மாஸ் காட்டி உள்ளார்.

மனுஷன்னா இப்படி இருக்கணும் என ராக்கி பாயின் ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகின்றனர்.

கொல்லும் கொரோனா

கொல்லும் கொரோனா

முதல் அலையை விட இரண்டாம் அலையில் ஏகப்பட்ட இந்திய உயிர்களை கொன்று குவித்து வருகிறது கொரோனா வைரஸ். கொரோனாவை கட்டுப்படுத்த அந்த அந்த மாநில முதல்வர்கள் ஊரடங்குகளை போட்டு தங்கள் மாநில மக்களை காப்பாற்றி வரும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பசி கொடியது

பசி கொடியது

கொரோனா வெளியே வந்தாதான் கொல்லும்.. ஆனால், பசி அரக்கன் வீட்டிற்குள்ளே சென்று கொல்வான் என ஏகப்பட்ட வைரல் மீம்கள் பலபேர் பசியால் வாடியதை பார்த்த பின்னரே உருவாக்கப்பட்டன. நாடு முழுவதும் சினிமா பிரபலங்கள் பலரும் பொது மக்களுக்கும் தங்களது திரையுலகை சார்ந்த தொழிலாளர்களுக்கும் இந்த லாக்டவுன் நேரத்தில் உதவி வருகின்றனர்.

ராக்கி பாய்

ராக்கி பாய்

இந்நிலையில், கேஜிஎஃப் படத்தின் நாயகன் ராக்கி பாய் கன்னட சினிமா தொழிலாளர்களுக்கு தன்னால் முடிந்த பல உதவிகளை இந்த லாக்டவுன் நேரத்தில் செய்து வருகிறார். அதிலும், தற்போது 1.5 கோடி ரூபாய் மதிப்பிலான பேருதவியை பல குடும்பங்களுக்கு அவர் செய்துள்ளது பாராட்டுக்களை அள்ளி வருகிறது.

தலா 5000

தலா 5000

கன்னட திரையுலகில் கடைநிலையில் வேலை பார்த்து வரும் சினிமா தொழிலாளர்கள் 3 ஆயிரம் பேரின் குடும்பத்துக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் நிதியை தொழிலாளர்களின் வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார். இந்த லாக்டவுன் காலத்தில் சினிமா துறை மொத்தமாக மூடியுள்ள நிலையில், பசியால் யாரும் வாடக் கூடாது என இந்த முன்னெடுப்பை அவர் செய்துள்ளார்.

ராயல் சல்யூட்

ராயல் சல்யூட்

கேஜிஎஃப் 2 படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், நடிகர் யஷ்ஷின் இந்த மனிதாபிமானமிக்க செயல் நாடு முழுவதும் உள்ள ராக்கி பாயின் ரசிகர்களை ராயல் சல்யூட் அடிக்க வைத்துள்ளது. ஏகப்பட்ட பிரபலங்களும் ரசிகர்களும் நடிகர் யஷ்ஷின் நல்ல மனதை பாராட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X