கோவா முதல்வரை திடீரென மனைவியுடன் சந்தித்த கேஜிஎஃப் நடிகர் யஷ்.. டிரெண்டாகும் புகைப்படங்கள்!
பனாஜி: கோவாவுக்கு தனது மனைவியுடன் கோடை விடுமுறைக்கு சென்றிருந்த நடிகர் யஷ் திடீரென கோவா முதல்வரை சந்தித்துள்ள புகைப்படங்கள் வெளியாகி டிரெண்டாகி வருகின்றன.
கன்னட நடிகர் யஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான கேஜிஎஃப் 2 திரைப்படம் வசூல் சூறாவளியாக மாறி 1000 கோடி வசூலை அள்ளி கன்னட திரையுலகத்திற்கே மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது.
சர்வதேச அளவில் நடிகர் யஷ்ஷுக்கு ரசிகர்கள் பெருகி உள்ளனர். இந்நிலையில், திடீரென கோவா முதல்வரை யஷ் சந்தித்திருப்பது பல கேள்விகளை எழுப்பி உள்ளன.

பஸ் டிரைவர் மகன்
கர்நாடகாவில் சாதாரண கண்டக்டராக இருந்த சிவாஜி ராவ் தமிழ்நாட்டில் மிகப்பெரிய சூப்பர் ஸ்டாராக மாறியது போல கர்நாடகாவில் சாதாரண பஸ் டிரைவரின் மகன் தான் நடிகர் யஷ். தனது முந்தைய படங்களின் புரமோஷன்களுக்காக பேருந்துகளிலும், ஆட்டோக்களிலும் ரசிகர்களிடம் தன் படத்தை பாருங்க என விளம்பரப்படுத்தி வந்த நடிகர் யஷ்ஷை இன்று தெரியாத உலக சினிமா ரசிகர்களே இருக்க முடியாது என்கிற நிலைக்கு உயர்ந்துள்ளார்.

1000 கோடி கிளப்
தென்னிந்தியாவில் 1000 கோடி கிளப்பில் இணைந்த 3வது படம் என்கிற பெருமையை கேஜிஎஃப் 2 திரைப்படம் பெற்றுள்ளது. இந்தியளவில் 4வது படம் என்றும் கூறப்படுகிறது. தங்கல், பாகுபலி 2, ஆர்ஆர்ஆர் படங்களை தொடர்ந்து இந்த இமாலய சாதனையை கேஜிஎஃப் 2 திரைப்படம் படைத்துள்ளது.

யஷ்ஷுக்கு பாராட்டு
கேஜிஎஃப் முதல் மற்றும் இரண்டாம் பாகம் படத்திற்காக மொத்தம் 6 ஆண்டுகளை செலவு செய்து கன்னட திரையுலகையே உலக அரங்கில் தலை நிமிரச் செய்த நடிகர் யஷ்ஷுக்கு கன்னட திரையுலகினர் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய சினிமாவும் பாராட்டுக்களை முன் வைத்து வருகிறது. இந்நிலையில், மனைவியுடன் கோவாவுக்கு கோடை விடுமுறைக்கு சென்றுள்ளார் ராக்கி பாய்.

கோவா முதல்வருடன் சந்திப்பு
கோவாவின் பனாஜி நகரில் கோவா முதல்வர் பிரமோத் சாவந்தை தனது மனைவி ராதிகா பண்டித் மற்றும் தனது டீம் உடன் இணைந்து திடீரென இன்று சந்தித்துள்ளார் நடிகர் யஷ். கோவா முதல்வருக்கு பூங்கொத்து கொடுத்து இந்த சந்திப்பை நடத்தி உள்ளார் நடிகர் யஷ்.

கோவா முதல்வர் ட்வீட்
இந்த சந்திப்பு குறித்தும் சந்திப்பு நடந்த போது எடுத்த புகைப்படங்களையும் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் ட்வீட் போட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார் கோவா முதல்வர். திடீரென முதல்வரை தனது மனைவி மற்றும் டீம் உடன் சந்திக்க வேண்டிய அவசியம் என்ன? என்கிற கேள்வியை நெட்டிசன்கள் கிளப்பி உள்ளனர்.
Recommended Video

டூர் வந்த இடத்தில்
சம்மர் விடுமுறையை தனது மனைவியுடன் கொண்டாட கோவா வந்துள்ள யஷ்ஷை சந்திக்க முதல்வர் விருப்பம் தெரிவித்த பேரில் இந்த சந்திப்பு நடந்திருக்கலாம் என்றும், இல்லையென்றால், அடுத்த படத்திற்கு கோவாவில் பிரம்மாண்டமாக படப்பிடிப்பு நடத்த கோரிக்கை வைத்துள்ளாரா என ஏகப்பட்ட கேள்விகளும், யூகங்களும் கிளம்பி வருகின்றன.


Click it and Unblock the Notifications











