எனக்குப் பிடித்த பாய்ஸ்.. செல்ல மகனுடன் ராக்கி பாய்.. க்யூட் போட்டோவை வெளியிட்ட நடிகை ராதிகா!

By

பெங்களூரு: கே.ஜி.எஃப் ஹீரோ யஷ் தனது ஏழு மாத மகனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நடிகை ராதிகா பண்டிட்.

Recommended Video

KGF Yash Shared his son Ayush first Picture | Radhika Pandit

பிரபல கன்னட ஹீரோ யஷ். கே.ஜி.எஃப் படம் மூலம் இந்தியா முழுவதும் அறிமுகமானவர். இந்தப் படம் கன்னடம், தமிழ் உட்பட 5 மொழிகளில் கடந்த 2018 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது.

படம் ஹிட்டானதை அடுத்து இதன் இரண்டாம் பாகத்தில் இப்போது நடித்து வருகிறார்.

அக்டோபர் ரிலீஸ்

அக்டோபர் ரிலீஸ்

முதல் பாகத்தில் நடித்த ஶ்ரீனிதி ஷெட்டி, ஆனந்த் நாக், மாளவிகா அவினாஷ் உட்பட பலர் இதில் நடிக்கின்றனர். முதல் பாகத்தை இயக்கிய பிரசாந்த் நீல் இதையும் இயக்குகிறார். பிரபல இந்தி நடிகர் சஞ்சய் தத், அதீரா என்ற வில்லனாக நடிக்கிறார். ரவீணா டாண்டன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். முதல் பாகத்தைப் போல இந்தப் படத்துக்கும் அதிக எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படம் அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆக இருப்பதாகக் கூறப்படுகிறது.

யஷ், ராதிகா பண்டிட்

யஷ், ராதிகா பண்டிட்

இந்நிலையில், தனது ஏழு மாத மகனுடன் யஷ் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நடிகர் யஷ்ஷும், அவர் மனைவி நடிகை ராதிகா பண்டிட்டும் 'மிஸ்டர் அண்ட் மிசஸ் ராமாச்சாரி' என்ற கன்னடப் படத்தில் நடித்தபோது காதலில் விழுந்தனர். சில வருடங்களாகக் காதலித்த அவர்கள், 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.

மகன் போட்டோ

மகன் போட்டோ

இவர்களுக்கு அயிரா என்ற மகள் இருக்கிறார். கடந்த அக்டோபர் மாதம் ராதிகாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. மகனின் புகைப்படத்தை வெளியிடுங்கள் என்று ரசிகர்கள், அவர்களின் சமூகவலைத்தள கணக்கில் கோரிக்கை வைத்தபடி இருந்தனர். இந்நிலையில், நடிகர் யஷ்ஷும் ராதிகா பண்டிட்டும் தங்கள் செல்ல மகனின் போட்டோவை கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிட்டனர்.

ஜூனியர் ராக்கி

ஜூனியர் ராக்கி

'என் செல்ல மகனுக்கு ஹலோ சொல்லுங்கள், உங்கள் அன்பையும் ஆசியையும் அவனுக்கு கொடுங்கள்' என்று தெரிவித்திருந்தார் யஷ். இதையடுத்து ரசிகர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தனர். சிலர், ஜூனியர் ராக்கி பாய் என்றும் கே.ஜி.எஃப் சாப்டர் 25 படத்தின் ஹீரோ என்றும் குழந்தையை வர்ணித்திருந்தனர். இந்த போட்டோ அப்போது வைரலானது.

பிடித்த பாய்ஸ்

பிடித்த பாய்ஸ்

இந்நிலையில், நடிகர் யஷ் தனது மகன் அயுஷை கையில் வைத்திருக்கும் புகைப்படத்தை இப்போது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார் நடிகை ராதிகா பண்டிட். 'எனக்கு பிடித்த பாய்ஸ்' என்று அதற்கு கேப்ஷன் கொடுத்துள்ளார். இதற்கும் ரசிகர்கள் ஏராளமான கமென்ட்களை அள்ளித் தெளித்துள்ளனர். ஜூனியர் செம க்யூட் என்றும் இப்பவே அருமையா போஸ் கொடுக்கறதை பாரேன் என்றும் சிலர் தெரிவித்துள்ளனர். இந்த போட்டோ வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X