தமிழ்ல ஒரு ரவுண்ட் வருவார் போல இருக்கே... ஹீரோ விஜய் ஆண்டனியுடன் மோதுகிறார், 'கேஜிஎப்' வில்லன்!

By

சென்னை: விஜய் ஆண்டனியுடன் 'கேஜிஎப் சாப்டர் 1' படத்தின் வில்லன் நடிகர் மோத இருக்கிறார்.

விதார்த் நடித்த ஆள் படம் மூலம் இயக்குனர் ஆனவர், ஆனந்த கிருஷ்ணன். அடுத்து அவர் 'மெட்ரோ' என்ற படத்தை இயக்கினார்.

இதில் சிரிஷ், பாபி சிம்ஹா, சென்ட்ராயன், யோகிபாபு உட்பட பலர் நடித்திருந்தனர். உதயகுமார் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

ஆத்மிகா

ஆத்மிகா

இந்த இரண்டு படங்களும் கவனிக்கப்பட்டன. இதையடுத்து அவர் இயக்கும் படத்தில் கதாநாயகனாக விஜய் ஆண்டனி நடிக்கிறார். அவர் ஜோடியாக ஆத்மிகா நடிக்கிறார். இந்தப் படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார். உதயகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். டி.டி.ராஜா தயாரிக்கிறார். இவர், கந்தக்கோட்டை, வல்லக்கோட்டை ஆகிய படங்களைத் தயாரித்தவர்.

ஆக்‌ஷனுக்கு முக்கியத்துவம்

ஆக்‌ஷனுக்கு முக்கியத்துவம்

இந்தப் படத்தின் ஷூட்டிங், கடந்த 13 ஆம் தேதி சென்னையில் தொடங்கி நடைபெற்று வந்தது. கொரோனாவுக்காக வரும் 31 ஆம் தேதி வரை படப்பிடிப்புகள் ரத்து செய்யப் பட்டுள்ளதால், இதன் ஷூட்டிங்கும் ரத்து செய்யப்பட்டுள்ளது. சமூகத்துக்குத் தேவையான ஒரு விஷயத்தைப் பேசப் போகும் இந்தப் படம், ஆக்‌ஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படுகிறது.

கேஜிஎப் வில்லன்

கேஜிஎப் வில்லன்

முழுவதும் சென்னையில் நடக்கும் கதையான இதில், சில உண்மை சம்பவங்களும் இடம்பெற இருப்பதாகப் படக்குழு கூறுகிறது. இதில், 'கேஜிஎப் சாப்டர் 1' படத்தில் கருடா என்ற வில்லனாக நடித்த ராமச்சந்திர ராஜூ முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அவர், விஜய் ஆண்டனிக்கு வில்லனாக நடிப்பதாகக் கூறப்படுகிறது. அவர் ஏற்கனவே தமிழில், கார்த்தி, ராஷ்மிகா மந்தனா நடிக்கும் சுல்தான் படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். மேலும் சில படங்களில் நடிக்க அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

விஜய் ஆண்டனி

விஜய் ஆண்டனி

பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில், சுரேஷ் கோபியுடன் விஜய் ஆண்டனி நடித்துள்ள 'தமிழரசன்' படம் ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இதையடுத்து அவர் நவீன் இயக்கும் அக்னிச்சிறகுகள் படத்தில் நடித்துள்ளார். இதில் அருண்விஜய், அக்‌ஷராஹாசன், சென்ட்ராயன் உட்பட பலர் நடித்துள்ளனர். அடுத்து 'வாய்மை' செந்தில்குமார் இயக்கும் காக்கி படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து விஜய் மில்டன் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X