KGF Vs Salaar: லோகேஷ் ஸ்டைலில் பிரசாந்த் நீல் யுனிவர்ஸ்... சலார் படத்தில் கேஜிஎஃப் சம்பவம்?

ஹைதராபாத்: யாஷ் நடித்த கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகம் கடந்தாண்டு இதேநாளில் வெளியாகியிருந்தது.

முதல் பாகத்தை போன்ற கேஜிஎஃப் 2ம் பாகமும் பாக்ஸ் ஆபிஸில் மரண மாஸ் காட்டியது.

கேஜிஎஃப் 3ம் பாகம் விரைவில் உருவாகவுள்ள நிலையில், பிரபாஸ் நடிக்கும் சலார் படத்தை இயக்கி வருகிறார் பிரசாந்த் நீல்.

 KGF Vs Salaar: Prashanth Neel Salaar is reported to be the film in the universal concept of KGF

இந்தப் படம் பிரசாந்த் நீலின் கேஜிஎஃப் யுனிவர்ஸில் இருக்கும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கேஜிஎஃப் - சலார்

பிரசாந்த் நீல் இயக்கத்தில் 2018ம் ஆண்டு வெளியான கேஜிஎஃப் திரைப்படம் பிரம்மாண்டமான வெற்றிப் பெற்றது. யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். அதேபோல், கடந்தாண்டு வெளியான 2ம் பாகமும் பாக்ஸ் ஆபிஸில் 1200 கோடிக்கும் மேல் வசூலித்தது. யாஷின் ராக்கி பாய் கேரக்டர் ரசிகர்களை சிலிர்க்க வைத்தது.

கேஜிஎஃப் படத்தின் மூன்றாம் பாகமும் விரைவில் உருவாகும் என பிரசாந்த் நீல் தெரிவித்துள்ளார். இதனிடையே அவர் தற்போது பிரபாஸ் நடிக்கும் சலார் படத்தை இயக்கி வருகிறார். பிரபாஸுடன் பிருத்விராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்தப் படம், செப்டம்பர் 28ம் தேதி வெளியாகிறது. பிரபாஸுக்கு வில்லனாக பிருத்விராஜ் நடிப்பதால், படம் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது.

 KGF Vs Salaar: Prashanth Neel Salaar is reported to be the film in the universal concept of KGF

சலார் படத்தின் போஸ்டர், பிரபாஸ், பிருத்விராஜ் ஆகியோரின் கேரக்டர் ஸ்கெட்ச் ஆகியவற்றை பார்க்கும் போதே, இது கேஜிஎஃப் படத்தின் கலர் டோனில் இருப்பதாக ரசிகர்கள் கூறி வந்தனர். தற்போது இன்னொரு முக்கியமான அப்டேட்டும் கிடைத்துள்ளது. அதன்படி, சலார் படத்திற்கும் கேஜிஎஃப்-க்கும் இடையே தொடர்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.

கேஜிஎஃப் படத்தின் சீக்வெல்லாகவோ அல்லது அதில் தொடர்புடைய ஒரு கதைக்களமாகவோ இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. முக்கியமாக கேஜிஎஃப் ராக்கி பாய் யாஷ் கேரக்டர் போன்றே சலார் படத்தில் பிரபாஸின் கேரக்டர் வடிவமைக்கப்பட்டுள்ளதாம். அதேபோல், கேஜிஎஃப் படத்தில் ஆதிராவாக மிரட்டிய சஞ்சய் தத் கேரக்டர் போன்றே, சலாரில் பிருத்விராஜின் வரதராஜ மன்னார் பாத்திரம் இருக்கும் என சொல்லப்படுகிறது.

 KGF Vs Salaar: Prashanth Neel Salaar is reported to be the film in the universal concept of KGF

தமிழில் லோகேஷ் கனகராஜ் தற்போது யுனிவர்ஸ் கான்செப்ட்டில் படங்கள் இயக்கி வருகிறார். இதே ஸ்டைலை தனது படங்களிலும் கொண்டு வருகிறாராம் பிரசாந்த் நீல். சலார் வெளியானதும், இதில் இருந்து கேஜிஎஃப் 3 திரைக்கதை அமையும் என சொல்லப்படுகிறது. இதனையடுத்து சலார் படத்தில் பிரபாஸின் கேரக்டர், கேஜிஎஃப் யாஷின் போஸ்டரை ரசிகர்கள் டிவிட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X