தமிழ் மக்களின் அன்பும் ஆதரவும் என்றும் தேவை… கே.ஜி.எஃப் யாஷ்

சென்னை: கே.ஜி எஃப் படத்தின் நடிகர் யாஷ் விமான நிலையத்தில் பேட்டி அளித்தார். தமிழக மக்களின் ஆதரவும் அன்பும் என்றும் வேண்டும் என்று கூறினார். அடுத்த படத்திற்கான படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கின்றது ஜூன் அல்லது ஜூலையில் திரைக்கு வரும் என்று கூறினார்.

கே.ஜி எஃப் படத்தின் மூலம் உச்சத்தை தொட்டவர் யாஷ் இன்று வெற்றி நாயகனாக வளர்ந்து நிற்கிறார். தமிழ் சினிமாவில் கூட ஓரு ஹீரோவுக்கு இப்படி ஒரு ஆக்சன் காட்சி இருக்குமா என்றால் சந்தேகம் தான். அந்த அளவிற்கு கே.ஜி.எஃப்பில் ஒவ்வொரு ஆக்சன் காட்சியும் சும்மா இடியாய் அமைந்து இருக்கும். இந்த ஒரு படத்திலேயே தமிழ் ரசிகர்களின் மனதில் பதிந்து விட்டார் யாஷ்.

 KGF Yash press meet in airport

தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்த அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். சென்னைக்கு வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார். அடுத்த படத்திற்கான படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கின்றது ஜூன் அல்லது ஜூலையில் திரையரங்கிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

சென்னையில் உள்ள ரசிகர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். உங்களின் ஆதரவும் அன்பும் என்றும் வேண்டும் என்று கூறினார். நான் நம்புவது ஒன்றே ஒன்றுதான் எங்கிருந்து வந்தோம் என்பது முக்கியமல்ல என்ன செய்து கொண்டிருக்கின்றோம் எப்படி வாழ்கிறோம் அதுதான் முக்கியம் நான் செய்கின்ற வேலை மக்களுக்கு பிடித்ததால்தான் கே ஜி எஃப் வெற்றி அடைந்தது என்றார்.

அன்பு தான் முக்கியம் மக்களுக்கு என்னை பிடித்ததால்தான் ஏற்றுக்கொண்டார்கள் இந்த படம் இவ்வளவு வசூல் செய்திருக்கிறது. எப்பொழுதும் அவர்களின் அன்பு எனக்கு வேண்டும் என்றார்.

தெலுங்கானா என்கவுண்டர் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, தவறு செய்தவர்களுக்கு தண்டனை கிடைத்தால் மட்டுமே பயம் இருக்கும் ஆனால் சட்டத்தை மதித்து வாழும் நாட்டில் உள்ளோம் கடுமையான சட்டங்கள் கொண்டு வந்தால் மட்டுமே இது போன்ற தவறுகள் செய்பவர்களுக்கு பயம் ஏற்படும் என்று பதில் அளித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X