Malavika in Hospital :மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கேஜிஎப் நடிகை.. என்ன காரணம் தெரியுமா?

பெங்களூரு : நடிகை மாளவிகா அவினாஷ் சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர். சமீபத்தில் இவரது நடிப்பில் கேஜிஎப் 2 படம் வெளியாகி வரவேற்பை பெற்றது.

வழக்கறிஞரான மாளவிகா, ஜேஜே என்ற படத்தில் நாயகியின் சகோதரியாக நடித்து கவனத்தை ஈர்த்திருந்தார். தொடர்ந்து ஆறு, ஆதி உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

KGF2 Actress Malavika avinash hospitalized for this reason

இந்நிலையில் மாளவிகா திடீரென மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மாளவிகாவிற்கு மருத்துவமனையில் சிகிச்சை :நடிகை மாளவிகா அவினாஷ் மாதவன் நடிப்பில் வெளியான ஜேஜே படத்தின்மூலம் தமிழில் சிறப்பான என்ட்ரியை கொடுத்தவர். இந்தப் படத்தில் நாயகி ஜமுனாவின் சகோதரியாக, அவர் தனது காதலனை தேடிக் கண்டுபிடிக்க உதவும் கேரக்டரில் நடித்திருந்தார் மாளவிகா. தொடர்ந்து குணச்சித்திர கேரக்டர்களில் நடித்துவரும் மாளவிகா, தமிழில் சூர்யாவின் ஆறு, விஜய்யின் ஆதி, டிஷ்யூம் போன்ற படங்களில் நடித்து கவனத்தை ஈர்த்தவர்.

வழக்கறிஞராகவும், சமூக ஆர்வலராகவும் அரசியல்வாதியாகவும் தொடர்ந்து செயல்பட்டுவரும் மாளவிகாவிற்கு சின்னத்திரைதான் சிறப்பான அடையாளத்தை கொடுத்தது. கே பாலசந்தரின் அண்ணி என்ற சீரியல்மூலம் அறிமுகமான இவர், ஏராளமான ரசிகர்களை தன்னுடைய சிறப்பான நடிப்பால் கவர்ந்தவர். இந்தத் தொடரில் தன்னுடைய குடும்பத்திற்காக இவர் மேற்கொள்ளும் பல விஷயங்கள், ரசிகர்களை இவரது கேரக்டர்மீது அதிகமான கவனத்தை ஏற்படுத்தியது.

சமீபத்தில் யாஷ் -பிரஷாந்த் நீல் கூட்டணியில் வெளியான கேஜிஎப் 2 படத்திலும் முக்கியமான கேரக்டரில் மாளவிகா நடித்திருந்தார். இந்நிலையில் நடிகை மாளவிகா உடல்நலக்குறைவு காரணமாக திடீரென மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து தன்னுடைய சமூக வலைதளத்தில் புகைப்படத்துடன் கூடிய பதிவை வெளியிட்டுள்ளார் மாளவிகா.

அந்த புகைப்படத்தில் யாராவது ஒற்றை தலைவலியாக பாதிக்கப்பட்டிருந்தால் அதை சாதாரணமாக எடுத்து கொள்ள வேண்டாம் என்றும் உடனடியாக மருத்துவர்களின் உதவியான நாடுங்கள் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். இல்லையென்றால் தன்னை போல மருத்துவமனை படுக்கையில் இருக்க வேண்டியிருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து அதிர்ச்சி அடைந்துள்ள ரசிகர்கள், அவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து ரசிகர்களுக்கு மாளவிகா நன்றியும் தெரிவித்துள்ளார்.

KGF2 Actress Malavika avinash hospitalized for this reason

தமிழில் மட்டுமில்லாமல், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார் மாளவிகா அவினாஷ். 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவருக்கு சமீபத்தில் வெளியான கேஜிஎப் 2 படம் சிறப்பான வரவேற்பை பெற்றுத் தந்துள்ளது. இதையடுத்து அதிகமான படங்களிலும் ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக பங்கேற்கும் வாய்ப்பையும் பெற்றுள்ளார் மாளவிகா. இதனிடையே தன்னுடைய ஒற்றை தலைவலி பிரச்சினையில் இருந்து விடுபட பாரம்பரிய மருத்துவத்துடன், நெப்ரோசிம் போன்றவற்றை எடுத்துக் கொண்டுள்ளதாகவும் மாளவிகா தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X