தளபதி 67 படத்தில் இணையும் கேஜிஎப் 2 வில்லன்.. விஜய்யோட கெட்டப் எப்படி இருக்கப் போகுது தெரியுமா?

சென்னை : நடிகர் விஜய்யின் நடிப்பில் தற்போது சூட்டிங் நடைபெற்று வரும் வாரிசு படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இந்தப் படத்தை தொடர்ந்து அக்டோபர் -நவம்பர் மாதங்களில் தளபதி 67 படத்தின் சூட்டிங்கில் இணையவுள்ளார் விஜய்.

இந்தப் படத்தில் 6 வில்லன்கள் இருப்பதாக முன்னதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது வில்லன் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய்

நடிகர் விஜய்

நடிகர் விஜய் தற்போது தனது 66வது படமான வாரிசு படத்தின் சூட்டிங்கில் இணைந்துள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் ஐதராபாத், விசாகப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று முடிந்துள்ளது. விரைவில் படத்தின் சூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் துவங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில் படத்தின் அறிவிப்பு

விரைவில் படத்தின் அறிவிப்பு

இந்தப் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் இணையவுள்ளது தெரிந்த விஷயம்தான். இந்தப் படத்தின் சூட்டிங் வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் துவங்கவுள்ளதாக முன்னதாக தகவல்கள் வெளியாகிய நிலையில் விரைவில் படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்தடுத்த அப்டேட்கள்

அடுத்தடுத்த அப்டேட்கள்

அதிகாரப்பூர்வமாக இல்லை என்றாலும் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியானவணணம்தான் உள்ளன. இந்த அப்டேட்களால் தொடர்ந்து ட்விட்டர் ட்ரெண்டிங்கில் விஜய் இருக்கிறாரோ இல்லையோ தளபதி 67 படம் இடம்பெற்று வருகிறது. இந்தப் படத்தின் சூட்டிங் அப்டேட்டை ரசிகர்கள் அதிகமாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

வில்லனாக சஞ்சய் தத்

வில்லனாக சஞ்சய் தத்

இந்நிலையில் இந்தப் படத்தில் கேங்ஸ்டராக விஜய் நடிக்கவுள்ளதாகவும் அவருக்கு 6 வில்லன்கள் என்பதும் முன்னதாகவே கூறப்பட்ட நிலையில் தற்போது கேஜிஎப் 2 வில்லன் சஞ்சய் தத் இந்தப் படத்தின் வில்லனாக இணைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு 10 கோடி ரூபாய் சம்பளமாக பேசப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் விஜய்

சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் விஜய்

இதனிடையே அடுத்ததாக பிரித்விராஜ் மற்றும் கௌதம் மேனன் ஆகியோரும் இந்தப் படத்தில் வில்லன்களாக இணையவுள்ளதாகவும் இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்தப் படத்தில் கேங்ஸ்டராக விஜய் நடிக்கவுள்ள நிலையில், இதற்காக அவர் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கிற்கு மாறவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

அப்டேட்களுக்காக வெயிட்டிங்

அப்டேட்களுக்காக வெயிட்டிங்

படத்தில் த்ரிஷா, சமந்தா உள்ளிட்டவர்கள் நாயகிகளாக இணையவுள்ளதாகவும் இதில் சமந்தா வில்லியாக நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. இவர்கள் இல்லை கீர்த்தி சுரேஷ்தான் நாயகி என்றும் கூறப்படுகிறது. எதுவாக இருந்தாலும் படத்தின் அறிவிப்பை அடுத்தே அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகும்.

ரசிகர்கள் ஆர்வம்

ரசிகர்கள் ஆர்வம்

இந்நிலையில் ரசிகர்களின் பொறுமையை மிகவும் அதிகமாக தயாரிப்புத் தரப்பு சோதித்து வருகிறது. லோகேஷ் கனகராஜின் பொறுமையையும் சேர்த்து சோதித்து வருகிறது. அவரிடம் தொடர்ந்து ரசிகர்கள் தளபதி 67 அப்டேட் கேட்டு நச்சரித்த நிலையில், மனிதன் ஒரு கட்டத்தில் சமூக வலைதளங்களை விட்டே தற்காலிகமாக விலகிவிட்டார்.

கேரக்டருக்கான எதிர்பார்ப்பு

கேரக்டருக்கான எதிர்பார்ப்பு

விரைவில் தளபதி 67 படத்தின் அறிவிப்பை வெளியிட்டு, சூட்டிங்கை துவக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது. இந்தப் படத்தின்மூலம் கேங்ஸ்டராக விஜய் நடிக்கவுள்ள நிலையில், அவரது கெட்டப் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் அமையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது அந்த கேரக்டரின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X