கேஜிஎப் 3 படத்தோட சூட்டிங் எப்ப துவங்குதுன்னு தெரியுமா... தயாரிப்பாளர் சொன்ன சூப்பர் அப்டேட் இதோ!

ஐதராபாத் : நடிகர் யஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், ரவீணா டன்டன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் சமீபத்தில் வெளியான கேஜிஎப் 2 படம் மிரட்டலாக அமைந்திருந்தது. படம் வசூலை வாரிக்குவித்து வருகிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் அடுத்த பாகம் குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கேஜிஎப் 2 படம்

கேஜிஎப் 2 படம்

நடிகர் யஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், ரவீணா டன்டன் ஆகியோர் நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதத்தில் பான் இந்தியா படமாக திரையரங்குகளில் வெளியானது கேஜிஎப் சாப்டர் 2 படம். இந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சிகளும் மிரட்டலாக அமைந்திருந்தது. ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு இந்தப் படம் உள்ளாகியுள்ளது.

மிரட்டலான அனுபவம்

மிரட்டலான அனுபவம்

முன்னதாக வெளியான கேஜிஎப் படமும் இத்தகைய மிரட்டலான அனுபவத்தையே ரசிகர்களுக்கு கொடுத்தது. இதையடுத்து அப்போதே இரண்டாவது பாகம் குறித்த அப்டேட்டை ரசிகர்கள் கேட்கத் துவங்கினர். இந்நிலையில் இரண்டாவது பாகமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

கேங்ஸ்டர் படம்

கேங்ஸ்டர் படம்

கேங்ஸ்டர் படமாகவே இந்தப்படம் வன்முறை தூக்கலாகவே வெளியான நிலையில், படத்தில் அதற்கான நியாயம் கூறப்பட்டுள்ளது. யஷ் தன்னுடைய மிரட்டலான நடிப்பை முதல் பாகத்தை போலவே இரண்டாவது பாகத்திலும் வெளிப்படுத்தியிருந்தார். முன்னதாக ஒரு பேட்டியில் கன்னட மொழிப்படங்களை சர்வதேச தரத்திற்கு வெளிக் கொண்டுவருவதே தன்னுடைய லட்சியம் என்றும் கூறியிருந்தார்.

அடுத்த பாகத்திற்கான எதிர்பார்ப்பு

அடுத்த பாகத்திற்கான எதிர்பார்ப்பு

பிரஷாந்த் நீலுடன் இணைந்து அவர் அதற்கான முன்னுரையை கேஜிஎப் படங்களின்மூலம் எழுதியுள்ளார். இந்நிலையில் இந்தப் படத்தின் அடுத்த பாகம் குறித்த கேள்விகள் ரசிகர்களிடையே படத்தின் ரிலீசை தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகின்றன. இதன் அடுத்த பாகத்தை உருவாக்க 8 ஆண்டுகள் பிடிக்கும் என்று பேட்டியொன்றில் பிரஷாந்த் நீல் தெரிவித்திருந்தார்.

தயாரிப்பாளர் அப்டேட்

தயாரிப்பாளர் அப்டேட்

ஆனால் கேஜிஎப் 3 படத்திற்கான வேலைகள் துவங்கியுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் விஜய் கிராகந்தூர் முன்னதாக கூறியிருந்தார். தற்போது பிரஷாந்த் நீல் பிரபாஸ் மற்றும் ஸ்ருதிஷாசனை வைத்து சலார் படத்தை இயக்கி வருகிறார். இதன் 35 சதவிகித சூட்டிங் நிறைவு பெற்றுள்ளது. அடுத்த வாரத்தில் அடுத்தக்கட்ட சூட்டிங் துவங்கவுள்ளது.

சலார் குறித்து அப்டேட்

சலார் குறித்து அப்டேட்

இந்தப் படத்தின் சூட்டிங் இந்த ஆண்டு அக்டோபர் அல்லது நவம்பரில் நிறைவடையவுள்ளதாகவும் விஜய் கிராகந்தூர் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங் துவங்கியவுடன் படத்தின் டீசர் குறித்த அப்டேட் வெளியாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நவம்பர் மாதத்தில் கேஜிஎப் 3

நவம்பர் மாதத்தில் கேஜிஎப் 3

இதையடுத்து கேஜிஎப் 3 படத்தின் சூட்டிங் நவம்பர் மாதத்தை அடுத்து துவங்கும் என்றும் அடுத்த ஆண்டில் படம் ரிலீஸ் செய்யப்படும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். படத்தின் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X