அதே விக்ரம் கூட்டணி… டைரக்டர் மட்டும் அஜித்தின் ஃபேவரைட்… கமலின் புது கணக்கு!

சென்னை: இந்தியன் 2 படத்தில் நடித்து வரும் கமல்ஹாசன் மணிரத்னம் இயக்கவுள்ள புதிய படத்தில் கமிட் ஆகியுள்ளார்.

கமலின் 234வது படமாக உருவாகவுள்ள இதன் படப்பிடிப்பு அடுத்தாண்டு தொடங்கவுள்ளது.

இதனிடையே கமல்ஹாசனின் 233வது படம் குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

கமல்ஹாசன் 234

கமல்ஹாசன் 234

விக்ரம் மூலம் வெறித்தனமாக கம்பேக் கொடுத்த கமல்ஹாசன், தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 அடுத்தாண்டு ஜூன் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே கமலின் 68வது பிறந்தநாளில் அவரது 234வது படம் குறித்த அப்டேட் வெளியானது. அதன்படி, கமலின் 234வது படத்தை மணிரத்னம் இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. நாயகன் படத்துக்குப் பிறகு கமல் - மணிரத்னம் கூட்டணி மீண்டும் இணைவது கோலிவுட்டை பரபரப்பாக்கியுள்ளது.

கமல்ஹாசன் 233 இயக்குநர்?

கமல்ஹாசன் 233 இயக்குநர்?

கமல் - மணிரத்னம் இணையும் படத்தின் ஷூட்டிங், பொன்னியின் செல்வன் 2 ரிலீஸுக்குப் பின்னர் தான் தொடங்குகிறது. இதனிடையே கமல் தனது 233வது படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளாராம். இந்தப் படத்தை ஹெச் வினோத் இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, அஜித்தின் நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை கொடுத்துள்ள ஹெச் வினோத், இப்போது துணிவு படத்தை இயக்கியுள்ளார். தொடர்ச்சியாக அஜித்தின் 3 படங்களை இயக்கியுள்ள ஹெச் வினோத், முதன்முறையாக கமலுடன் இணையுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதே விக்ரம் கூட்டணி?

அதே விக்ரம் கூட்டணி?

துணிவு படத்திற்கு பின்னர் விஜய் சேதுபதியின் படத்தை ஹெச் வினோத் இயக்கவுள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால், கமல் நடிக்கும் படத்தில் தான் விஜய் சேதுபதியும் நடிக்கவுள்ளாராம். விக்ரம் படத்தில் கமலுக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். விஜய் சேதுபதியின் நடிப்பில் இம்ப்ரஸ் ஆன கமல், ஹெச் வினோத் இயக்கும் படத்திலும் அவரை கமிட் செய்துவிட்டாராம். ஆனால், இந்தப் படத்தில் விஜய் சேதுபதியின் கேரக்டர் குறித்து இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை. அதேநேரம், விஜய் சேதுபதிக்கு வில்லன் பாத்திரமாக இருக்காது என சொல்லப்படுகிறது.

ராஜ்கமல் தயாரிப்பில்

ராஜ்கமல் தயாரிப்பில்

கமல் 233வது பட குறித்த அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கமலுடன் விஜய் சேதுபதி நடிக்கவுள்ள நிலையில், அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கலாம் எனக் கூறப்படுகிறது. விக்ரம் கூட்டணியில் இருந்த ஃபஹத் பாசில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மட்டும் இந்தப் படத்தில் கிடையாது என தெரிகிறது. விக்ரம் படத்தை தொடர்ந்து கமலுடன் விஜய் சேதுபதி மீண்டும் இணைவது அவரது ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்டாக அமைந்துள்ளது. தற்போது ஷாருக்கானின் ஜவான் படத்தில் நடித்து வரும் விஜய் சேதுபதியின் கைவசம், இன்னும் ஏராளமான படங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X